நான் என் மக்களுக்குச் சொல்லிக் கொண்டு வருவது என்னவென்றால், - OSHO
சுமார் 30 வருடங்களாக அவ்வப்பொழுது நான் என் மக்களுக்குச் சொல்லிக் கொண்டு வருவது என்னவென்றால், எப்படி சிக்மண்ட் பிராய்டு இறந்து விட்டாரோ, அதைப்போல மனநல சோதனைகளும் இறந்துவிட்டன என்பதுதான்.
இதற்கு எந்த மனநல வைத்தியரும் இதுவரை மறுப்புக் கூறவில்லை.
உண்மை என்னவென்றால் மனநல வைத்தியம் என்று ஒன்று உயிரோடு இருந்தது இல்லை. அதை வாழ்க்கையில் விரக்தி அடைந்த மக்களின் மனவியாதியை கண்டறிய மேற்கொண்ட ஒரு முயற்சி என்று எடுத்துக் கொள்ளலாம்.
இந்த முறைப்படி, இந்த மனநல சோதனைகளால் இதுவரை யாரும் முழுமையாகக் குணமானதாகச் சரித்திரம் இல்லை.
இந்த மனநல வைத்திய முறையில் பலர் சுமார் 10 அல்லது 15, ஏன் 20 வருடம்கூட சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்கள்.! ஆனால், ஒருவராவது ஒரு அங்குலம் கூட, தங்களுடைய முழுமையான முழுமையான உள்நிலையின் ஆழத்தையோ, அல்லது உயரத்தையோ அறிந்ததாக நான் அறியவில்லை.
இப்படி பல வருடங்கள் பார்த்து, மக்கள் தாங்களே ஒதுங்கி வந்து விடுகிறார்கள். ஏனெனில், அவர்கள் பணமெல்லாம் இதில் ஏற்கனவே கரைந்து விட்டது.!
மக்கள் மனநல வைத்தியர்களை ஒதுக்கி விடுகிறார்கள். அவர்கள் குணமடைந்து விட்டதால் அல்ல. அவர்களின் பணம் கரைந்து விடுவதால்தான்.
உலகில் மனநல வைத்தியர்களுக்குத்தான் அதிக வருமானம் கிடைக்கிறது. ஆனால் அதில் ஒன்றுமே இல்லை. மக்களை யாரும் எப்போதும் ஏமாற்றிக் கொண்டே இருக்க முடியாது. மக்கள் விழிப்படையும் நாள் விரைவிலேயே வரும்.
இவர்களைப் பற்றிய என் கருத்து என்னவென்றால், இவர்களுக்கு இதயம் என்று ஒன்று இருந்தால், இப்படி ஒருவரின் கனவுகளை வைத்துப் பிழைப்பு நடத்த மாட்டார்கள்.
கனவுகளை அணுகுவது என்பது ஒரு அர்தமற்ற முயற்சி. அது எந்தவித பயனையும் கொடுக்காது.
ஏனெனில் கனவுகள் என்பது, மனதின் மேலோட்டமாகச் சஞ்சரிப்பது. நீங்கள் வெறுமனே கண்களை மூடிக்கொண்டு இருங்கள். அவைகள் ஒன்றன் பின் ஒன்றாக வருவதை உணர்வீர்கள்.
இதை நீங்கள் ஆராய்ந்து, பிரித்துப் பார்த்து, என்ன முடிவுக்கு வரமுடியும்? அது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அதில் நீங்கள் என்ன முடிவு எடுக்க முடியும்?
இந்த மனநல வைத்தியர்கள், ஒருவனது கனவையும், மனதையும் வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள். மனதுக்கு அப்பால் வேறு ஒன்று இருக்கிறது என்பதை அவர்கள் நம்பமாட்டார்கள்.
அப்படி நம்பினால், அது அவர்களின் பிழைப்பின் தற்கொலையாகிவிடும்.! ஏனெனில், உங்களது வாழ்வின் தொடக்கம் மனதுக்கு அப்பால்தான் உள்ளது.
நான் மக்களுக்குச் சொல்லிக்கொண்டு வருவது என்னவென்றால், எப்பொழுது மனநல வைத்தியம், தியானத்தின் அடிப்படையில் இயங்கவில்லையோ, எப்பொழுது அது ஒருவன் மனதைக் கரைத்து, மனமற்ற நிலைக்கு அழைத்துச் செல்லவில்லையோ அதனால் மக்களுக்கு எந்தவித உபயோகமும் கிடையாது.
எனவே எந்த மனநல ஆசிரியரும், என்னோடு ஒத்துவர வில்லை.!
ஒருக்கால், இப்பொழுது உள்ள மனநல வைத்தியர்கள் இதைக் கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள் என்று நம்புவோமாக.
--ஓஷோ--🌺🌿
Comments
Post a Comment