வாழ்வு இயந்திரதனமான செயலல்ல - OSHO
❤❤❤வாழ்வு இயந்திரதனமான செயலல்ல. அது நிச்சயதன்மையோடு இருக்க இயலாது. அது ஒரு கணிக்க இயலாத மர்மம். அடுத்த நொடி என்ன நடக்க போகிறது என்பதை அறிந்தவர் எவருமில்லை. ஏழாவது சொர்க்கத்தில் எங்கோ இருக்கிறார் என நீ நினைக்கும் கடவுள்கூட, அவர்கூட,….. அவர் அங்கு இருந்தால் —அவருக்கு கூட என்ன நடக்கப்போகிறது என தெரியாது, ஏனெனில் என்ன நடக்கப்போகிறது என்பது அவருக்கு தெரிந்திருந்தால் பிறகு வாழ்க்கை போலியானது, பிறகு எல்லாம் ஏற்கனவே எழுதிவைக்கபட்டு விட்டது. எல்லாவற்றின் இறுதி முடிவும் முன்பே உள்ளது. எதிர்காலம் திறந்திருக்குமானால், அடுத்து என்ன நடக்கபோகிறது என்பது அவருக்கு எப்படி தெரியும்? அடுத்தநொடி என்ன நிகழபோகிறது என்பதை கடவுள் அறிந்திருப்பாரேயானால், பிறகு வாழ்வு வெறும் ஒரு இறந்த இயந்திரதனமான நிகழ்வு, பிறகு சுதந்திரம் இல்லை. சுதந்திரம் இல்லாமல் வாழ்வு எப்படி இருக்கமுடியும்? பிறகு வளர்வதற்கு அல்லது வளராமல் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. எல்லாமும் ஏற்கனவே முடிவு செய்யபட்டிருந்தால் பிறகு எந்த பிரகாசமும் இல்லை, எந்த கம்பீரமும் இல்லை. பிறகு நீங்கள் வெறும் இயந்திர மனிதர்கள்.
இல்லை….. எந்த பாதுகாப்பும் இல்லை. அதுவே என்னுடைய செய்தி. எதுவும் பாதுகாப்பாக இருக்க இயலாது, ஏனெனில் ஒரு பாதுகாப்பான வாழ்வு இறப்பை விட மோசமானதாக இருக்கும்.
--ஓஷோ ❤❤❤❤
Comments
Post a Comment