கதிரவன் ஓர் நெருப்புக் கோளம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். - OSHO
கதிரவன் ஓர் நெருப்புக் கோளம் என்றுதான் பொதுவாக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் அது எல்லையற்ற ஆற்றலும் துடிப்பும் வெறியும் மிக்க உயிருள்ள பிராணி.
அது அடிக்கடி தன் மனநிலையை மாற்றிக் கொள்கிறது, சிறிதளவு அதன் மனநிலை மாறினாலும் பூமியின் உயிர்களை அது பாதிக்கிறது.
கதிரவனில் எதுவும் ஏற்படாமல் பூமியில் எந்தமாற்றமும் நிகழ்வதில்லை.
சூரிய கிரகணம் ஏற்பட்டால் கானகப் பறவைகள் 24 மணிநேரத்திற்கு முன்பே வாயடங்கிப் போய்விடுகின்றன,
பூமிமுழுவதுமே அமைதியாகி விடுகிறது.
பறவைகள் பாடுவதை நிறுத்தி விடுகின்றன. பயம்,சந்தேகம் ஆகியவற்றால் நடுநடுங்கி மெளனம் சாதிக்கின்றன.
குரங்குகள் மரங்களை விட்டிறங்கி தரைக்கு வந்து கும்பலாய் ஒன்றுகூடி அமர்ந்து விடுகின்றன.
எப்போதும் சேட்டையும் கூச்சலுமாய்ப் பரபரப்பாய் இருக்கும் அவை கிரகண காலத்தில் கடைப்பிடிக்கும் அமைதியைப்போல தியானம் செய்பவர்களும் கடைப்பிடிக்க மாட்டார்கள்.
-ஓஷோ
Comments
Post a Comment