Google

உண்மை மெய்ஞானம் என்ன ஆகும்? - ஓஷோ,,,,



உண்மை
மெய்ஞானம்
என்ன ஆகும்?
ஓஷோ,,,,

சாத்தானிடம் வேலை பார்க்கும் ஒரு குட்டிப்பிசாசு சாத்தானைப் பார்க்க அரக்க பரக்க ஓடி வந்தது.

பயத்தால் நடுங்கியபடி சாத்தானைப் பார்த்து பேச ஆரம்பித்தது.

ஆபத்து, ஆபத்து,,, உடனே நாம் ஏதாவது செய்தேயாக வேண்டும். இல்லாவிட்டால் இந்த உலகத்தில் தீமையே அழிந்துவிடும். பின் நாமும் அழிந்து விடுவோம்.

குட்டிப்பிசாசே,,, முதலில் விஷயத்தைச் சொல் "

பூலோகத்தில் ஒரு மனிதன் அடிப்படை உண்மைகளை கண்டுபிடித்து விட்டானாம். அதனை அவன் எல்லோரிடமும் சொல்லி விடுவான். எல்லோருக்கும் உண்மை தெரிந்து விட்டால் அன்பு பெருகும். தீமை அழிந்துவிடும். பின் நமக்கென்ன வேலை?"

சாத்தான் கட கடவென்று சிரித்தது.

முட்டாள் பிசாசே,,, முதலில் உட்கார்ந்து ஓய்வெடுத்துக் கொள். முட்டான் தனமாக பேசாதே. விஷயம் எனக்கும் தெரியும். நமது ஆட்களை நான் ஏற்கனவே அனுப்பி விட்டேன். இனிமேல் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். கவலைப்படாதே,,,, தீமை என்றும் அழியாது."

ஆனால்,,, ஆனால்,,, நான் அங்கிருந்துதானே நேரே இங்கே ஓடி வருகிறேன். அங்கே நமது ஆட்களை பார்க்கவில்லையே "

அந்த உண்மையைக் கண்டு பிடித்தவனைச் சுற்றி அறிஞர்கள், தத்துவஞானிகள், பண்டிதர்கள், பூசாரிகள், பாதிரியார்கள் . மதகுருமார்கள் நின்று கொண்டிருப்பார்களே? அவர்கள் எல்லாம் நமது ஆட்கள்.

அதனால் நீ எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம்.

இந்த மேதாவிகள் போடும் வாய்ச் சண்டையில் இவர்களுடைய வாதங்கள், பிரதிவாதங்களில், இவர்கள் அடிக்கும் கூத்தில் உண்மை துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடி விடும்.

இவர்கள் மூலமாகத்தான் நான் என் ரகசிய வேலையைச் செய்கிறேன். அவர்கள் என்னுடைய ரகசிய பிரதிநிதிகள். என்னுடைய உளவாளிகள்.
நான் போனாலும் மாறுவேடத்தில் தான் போவேன்.

இவர்கள் அடிக்கும் கூத்தில் அந்த ஞானியால் ஒன்றும் செய்ய முடியாது. அவனுக்கும் வயதாகிவிட்டது அவன் காலம் முடிந்துவிடும்.

அதன் பின் என் ஆட்கள் அந்த ஞானியின் சீடர்களாக, அவனது பிரதிநிதிகளாக, அவனது தூதர்களாக தங்களை அறிவித்துக் கொண்டு அவன் பெயரால் ஒரு மதத்தை தொடங்கி அவன் கண்டுபிடித்த மெய்ஞானத்தை பூண்டோடு அழித்து விடுவார்கள்."

ஒஷோ,,

Comments