Google

வேலை தியானம்(work meditation) விளக்கம்

வேலை தியானம்(work meditation) விளக்கம் :




நீங்கள் எதைச் செய்தாலும் ஆழ்ந்த கவனத்துடனேயே அதைச் செய்யுங்கள்.

 அப்போது தான் சிறிய காரியங்களும் புனிதமான காரியங்களாக மாறுகின்றன. 

அப்போது சமைப்பதும், சுத்தம் செய்வதும் கூட புனிதமானவையாக ஆகின்றன. 

நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்பது அல்ல கேள்வி. அதை எப்படிச் செய்து கொண்டிக்கிறீர்கள் என்பதே கேள்வி.

ஒரு ரோபோட்டைப் போல இயந்திரத்தனமாக நீங்கள் தரையை கழுவி விட முடியும்.

தரையை கழுவ வேண்டும் என்கிற கடமைக்காக கழுவி விடுகிறீர்கள். 

தரையை கழுவி விடுவதும் கூட மாபெரும் அனுபவமாக இருக்க முடியும் . அதை நீங்கள் தவற விட்டு விட்டீர்கள். 


தரை சுத்தமாகி இருக்கிறது. ஆனால் உங்களுக்குள் நிகழ்ந்து இருக்க வேண்டிய ஏதோ ஒன்று நிகல வில்லையே. 

நீங்கள் விழிப்புடன் அதை செய்து இருந்தால் தரையில் மட்டுமல்ல, உங்களுக்குள்ளும் ஒரு நுட்பமான சுத்திகரிப்பை உணர்ந்து இருப்பீர்கள். 

மிகுந்த விழிப்புடன் , விழிப்புணர்வால் வாழ்வின் அநேக கணங்களுக்கு ஒளியூட்டுங்கள். 

-- ஓஷோ --

செயல்_முறை :-

1.
ஒவ்வொரு செயலிலும் விழிப்புணர்வு கொண்டு செயல் செய்யுங்கள்.

 முழுமையாக அந்த வேலையின் முழு கவனத்தோடு நேசித்து செய்யுங்கள்.

2. அது சமையல் செய்வதாக இருக்கலாம், சிறிய வேலைகளாக இருக்கலாம், எந்த வேலையானாலும் இந்த தியான முறை கொண்டு செய்யுங்கள்.

3. நாம் செய்யும் அனைத்து வேலைகளையும் இந்த தியானம் மூலம் செய்யலாம்

--ஓஷோ 

இந்த தியானம் செய்து பார்த்து அநுபவம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Comments