உன் துன்பங்கள் மறையும், உன் கவலைகள் தீரும்
🌸 வாழ்க்கை, கலிபோர்னியாவில் வாழ்வதைப் போல் அல்ல என்பது நினைவிருக்கட்டும்.
கலிஃபோர்னியா என்பது பரந்த கிறுக்குப் பிடித்த இடம்.
"அங்குள்ள மக்கள்
ஒரு குருவிடமிருந்து இன்னொரு குருவிடம்...
பேஷன் மாறுவதுபோல் மாற்றிக் கொண்டே இருப்பார்கள்..."
🌸 அவர்கள் தங்கள் பற்பசையை மாற்றுவது போல,
மத குருவையும் மாற்றுவார்கள்...
சோப்பை மாற்றுவது போல,
அவர்களது ஆசிரியர்கள், அறிவுரையாளர்கள்,
உளவியல் ஆராய்ச்சியாளர்களை மாற்றிக் கொள்வார்கள்...
🌸 ஆஸ்கார் வைல்ட் கூறுவது போல...
"பேஷன் என்பது அசிங்கத்தின் வடிவம்,
அதை நாம் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்றாவிட்டால்...
அதைச் சகிக்க முடியாது.
ஆனால் அப்படி செய்ய எந்த அவசியமும் இல்லை.
🌸 அன்றொருநாள் ஒரு சந்நியாசி,
தான் ஒரு ஆசானை
நாடிப் போவதாகவும்,
தான் போகலாமா?
அதற்கு என் ஆசி கிடைக்குமா?
என்று கேட்டு கடிதம் எழுதியிருந்தார்...
🌸 மக்கள் இது போன்ற விநோதமான சூழ்நிலையில் இருக்கிறார்கள்...
"அவர்கள் பல்வேறு படகுகளில்,
ஒரே நேரத்தில் பயணம் செய்ய விரும்புகிறார்கள்..."
அவர்கள் தங்கள் வாழ்வை பேராபத்தில் போய் முடியும்படியாக உருவாக்குகிறார்கள்...
🌸 அவர் எழுதுகிறார்...
அவரது தியானம் நன்றாக இருப்பதாகவும்,
இதுவரை வார்த்தைகளாக மட்டுமே இருந்த
பல விஷயங்களை கண்டுணர்வதாகவும் எழுதியிருந்தார்...
🌸 "இப்போது இந்த நுட்பான தருணத்தில் யாரிடமாவது செல்வது மிக ஆபத்தானதாகும்.
ஆனால் நான் "போகாதே" என்று சொன்னால்,
அது என் தலையீடாகிவிடும்."
🌸 நீ தவறான பாதையில் சென்றாலும்,
நான் தலையிட விரும்பவில்லை.
ஆகவே, நான் அவருக்குத் தகவல் தந்துவிட்டேன்.
"நீ யாரிடம் போகிறாய் என்பது எனக்குத் தெரியாது...
ஆதலால் நான் ஆசி
வழங்க முடியாது.
ஆனால், உனக்குப் போதுமான புத்திசாலித்தனம் இருக்கிறது.
நீ சந்திக்கச் செல்லும் நபர் எந்த வகையிலாவது,
உன் வளர்ச்சிக்கு ஊட்டமளிப்பார் என்று உணர்ந்தால்தான்...
நீ செல்வது உன்னைப் பொறுத்தவரையும் சரியான காரியமாக இருக்கும்.
🌸 நீ சரியான பாதையில்தான் இருக்கிறாய் என்று உணர்ந்தால்தான்...
உன் துயரங்கள் மறையும்.
உன் துன்பங்கள் மறையும்.
உன் கவலைகள் தீரும்.
ஒரு வகை விளையாட்டுத்தனம்,
இலகுவான தன்மை உருவாகும்.
🌸 இதையெல்லாம்
நீ உணர முடிந்தால்...
நினைவிருக்கட்டும்,
யாராவது ஏதாவது ஊட்டமளித்தால்தான்...
நீ செல்வது சரியாகும்.
🌸 ஆனால்,
உண்மையில் நீ ஏற்கனவே சரியாக இருப்பதால் நீ வேறெங்கும் போகத் தேவையே இல்லை...
நீ செல்லும் பாதையிலேயே இன்னும் ஆழமாகச் செல்...
பக்கவாட்டு வழிகளில்
செல்ல முடியாதே...!
ஒரு அம்பு போல நேராகச் செல்.
🌿ஓஷோ🌿
Comments
Post a Comment