Google

மக்கள் எல்லோருக்கும் சுதந்திரம் தேவையில்லை



மக்கள் எல்லோருக்கும் சுதந்திரம் 

தேவையில்லை ...

அவர்களுக்கு தேவையெல்லாம் 

பாதுகாப்புதான் ...


அதற்காகத்தான் அவர்கள் 

மந்திரங்களையும் ...

சூத்திரங்களையும் உருவாக்கி 

வைத்துள்ளனர் ...


அவைகள்தான் அவர்களுக்கு நிச்சயம் 

போல் தெரிகின்றன ...

இறப்பு கதவைத் தட்டும்போது 

இந்த நிச்சயங்கள் ...


அனைத்தும் முட்டாள்தனமாக 

இருக்கும் ...

எந்த நிச்சயத் தன்மையையும் 

பிடித்துத் தொங்காதீர்கள் ...


வாழ்க்கை என்பது 

நிச்சயமற்றது ...

இந்த நிச்சயமற்ற தன்மையில் 

வாழ்வதற்கு தயாராக இருப்பதே தைரியம் ...


இந்த நிச்சயமற்ற தன்மையில் 

வாழ்வதற்கு தயாராக இருப்பதே நம்பகம் ...


ஒருவர் தனது உணர்விலும் 

புரிந்து கொள்ளுதலிலும் 

வாழ்வதே ...

இறப்பின் போது அவருக்கு 

துணை புரியும் ...


ஓஷோ .

Comments