Google

எந்தக் காரணமுமின்றி மகிழ்ச்சிதரும் அன்பு

 


கேள்வி: பிரிய ஓஷோ!

நான் உங்கள் அருகாமையில், 

ஆழ்ந்த அன்பை உணருகிறேன்...

உங்கள் அருகாமையில் இல்லாதபோது, 

அதே போல நடக்கவில்லை என்பதையும், 

நான் இப்போது உணருகிறேன்.

குருவுக்கும் - சீடனுக்குமான 

சிறந்த அனுபவங்களில்,

காலமும் நேரமும் எந்த வேறுபாடும் 

செய்ய முடியாது என்பது,

இப்போதும் உண்மையா?


ஓஷோ:

🌸 தேவ சூர்யா !

காலமும் நேரமும் 

சீடனுக்கும், குருவுக்கும் இடையே உள்ள

மிக உயர்ந்த அன்பு விஷயத்தில்...

எந்த வேறுபாடும் செய்ய முடியாது 

என்பது எப்போதும் உண்மை.


🌸 சில சமயங்களில், 

உண்மையல்ல என்பது கிடையாது.

"அது என்றும் மாறாத தன்மை வாய்ந்தது."

🌸 ஆனால் நிஜ அனுபவத்தில்,

முக்கியமாக ஆரம்பத்தில், 

சீடனின் அன்பு, அவ்வளவு தூய்மையாக இருப்பதில்லை...

அதற்கு எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.

🌸 அது இன்னும் ஆசையற்றதாக ஆகவில்லை.

சீடனின் அன்பு 

பல்வேறு விஷயங்களில் மாசுபட்டு உள்ளது.

🌸 இந்த ஆசைகள், எதிர்பார்ப்புகள் போன்ற மாசுகளால் கால, நேர வார்த்தமானங்கள் வேறுபாடு காண்பிப்பதாகத் தோற்றம் அளிக்கலாம்...

அன்பைப் பொறுத்தவரை, அவை எந்த வித்தியாசமும் காண்பிப்பதே இல்லை...

🌸 ஆனால் உன் அன்பு வெறும் அன்பு மட்டுமல்ல.

அதில், பல்வேறு விஷயங்கள்

சிக்கிக் கொண்டுள்ளன.

"முக்தி நிலைக்கான எதிர்பார்ப்பு  கூட, 

அதன் தூய்மையை அழிக்கப் போதுமானது ஆகும்."

🌸 அடிப்படை எதுவென்றால்...

தூய்மையான அன்பு --

"அது எந்தக் காரணமுமின்றி 

மகிழ்ச்சிதரும் அன்பு."

"இதயத்தில் நுழைந்து, 

குருவின் ஆனந்த நடனத்தில்

ஏற்கனவே சேர்ந்துவிட்ட அன்பு" --

பிறகு குரு உன்னை விட்டு 

வெளியே தனியே இல்லை;

நீ அவரை உனக்குள் எடுத்துச் செல்கிறாய்.

🌸 நீ எங்கிருந்தாலும் அவரும் இருப்பார்.

அதனால்தான் கால நேரங்கள்,

எந்த வேறுபாடும் காண்பிப்பது இல்லை.

🌸 "ஆனால், 

அன்புக்கான (object) ஆதாரப் பொருளாய்...

குருநாதர் இன்னும் 

உனக்கு வெளியே இருந்தால்,

அப்புறம் நிச்சயமாய் காலவெளி வித்தியாசத்தைக் காண்பிக்கும்."

🌸 இவை சீடன் அன்பின் தூய்மையின்மையால் வரும் வித்தியாசங்கள்.

இந்தத் தூய்மையின்மை 

ஆரம்பகாலத்தில் தவிர்க்க முடியாது.


ஏனெனில், முக்தி நிலைக்காக நீ ஆசைப்படுவதை...

தூய்மையின்மையாய் கருத முடியாது.

உண்மையில், 

குருவுக்கும் -- சீடனுக்குமான 

ஆழ்ந்த அன்பு அனுபவம் ஏற்படுவதே...

"இந்த முக்தி நிலைக்கான ஏக்கத்தின் காரணமாகத்தான்."


🌿ஓஷோ🌿

Comments