எந்த முயற்சியும் வீணாகி விடும் என்று நினைக்காதீர்கள்.
எந்த முயற்சியும் வீணாகி விடும் என்று நினைக்காதீர்கள். சில விதைகள் பூமிக்குள் பல்லாண்டு புதைத்து கிடக்கும். அடுத்து வரும் சாதகமான பருவத்தில், சட்டென முளை விடும். எல்லா மனிதருக்குள்ளும், எல்லாப் பொருள்களுக்குள்ளும் உண்மையின் வித்து இருக்கிறது.
உமது வேலை, விதைப்பதன்று சரியான பருவத்தில் அது முளைவிடத் பக்குவம் செய்ய வேண்டுவதே உமது பணி. நிரந்தரத்தில் எல்லாமே சாத்தியம். எந்த மனிதனின் சுதந்திரத்தின் மீதும் அவநம்பிக்கை கொள்ளாதீர்கள்.
அதனால், ஆர்வம் கொண்டவர்க்கும் ஆர்வம் அற்றவர்க்கும் சரிசமமாக, அனைவர்க்கும் விடுதலை கிடைக்கும் என்ற செய்தியை உபதேசிப்பீராக.
ஆர்வ மற்றவர்கள் நிச்சயம் ஆர்வம் கொள்வார்கள். அவர்கள் தமது அழகிய சிறகு விரித்துக் கதிரவனுக்கு எதிரே பறந்து அளக்கலாகா வான்வெளியில், எல்லையற்ற தொலைவை அடைவார்கள்.
மிர்தாத்.
Comments
Post a Comment