Google

நீங்களே வாழ்ந்து பார்க்க வேண்டும்.

 

என்னுடைய புரிந்துகொள்ளலை நான் உங்களுக்கு கொடுக்க முடியாது.அதை நீங்களே கண்டுபிடிக்க வேண்டும்.நீங்கள் வாழ்க்கையினுள் புகுந்து பார்க்க வேண்டும்.வாழ்ந்து பார்க்க வேண்டும்.


தவறுகளின் மூலம்,துழாவித் தேடுதலின் மூலம் கதவைக் காண முடியும்.சரியான ஆரம்பம் ஒன்று கிடைத்தபிறகு ஆரம்பிக்க நினைத்தால் ஆரம்பிக்கவே முடியாது.


"தவறான முதலடிகூட சரியான திசையை நோக்கி நடக்கும் முதலடியேயாகும்.அதுவும் ஒரு அடியெடுத்துவைத்தல் தானே! ஒரு ஆரம்பம்தானே! இருளில் துழாவுங்கள்.இப்படி துழாவுவதால் கதவைக் கண்டுபிடித்துவிட முடியும்"


தியானம் உங்களிடம் வரும்.அது எப்போதும் தானாகவே வரும் ஒன்றாகவே இருக்கும்.


நீங்களாக அதைக் கொண்டுவர முடியாது.ஆனாலும்,


அதை எப்போதும் தேடிச்சென்றவாறு இருக்க வேண்டும்.அப்படித் தேடினால்தான் நீங்கள் அதற்குத் திறந்தபடி இருப்பீர்கள்.


-- ஓஷோ

Comments