Google

நடந்து கொண்டே இருங்கள்



நடந்து கொண்டே இருங்கள் 

நான் எந்தப் புதிய பாதையையும் போட விரும்பவில்லை.

அதைப்போல,ஒரு பாதைதான் சரி,மற்றவை அனைத்தும் தவறு என்று குற்றம் காணவும் விரும்பவில்லை.

அந்தப் பாதைகள் எவ்வளவு வித்தியாசம் இருந்தாலும்,எல்லாப் பாதைகளும் சரியே என்று கூறவே நான் விரும்புகிறேன்.

மஹாவீராவின் பாதைக்கும்,முகம்மதுவின் பாதைக்கும் வித்தியாசங்கள் இருப்பது ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

அவைகளில் வித்தியாசம் இல்லாமல் இருந்தால் தான் அதிசயம்! அவைகள் ஒன்றுபோல் இருந்தால்,அது செயற்கைத்தன்மை உடையதாகவே இருக்கும்.

நான் எந்த புதிய பாதையையும் ஏற்படுத்த விரும்பவில்லை.

இதுவரை ஏற்படுத்திய பாதைகளும்,இன்றைக்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பாதைகளும் மற்றும் நாளை ஏற்படப் போகும் பாதைகள் அனைத்தும் என்னைப் பொருத்தவரையில் சரியே.

ஆனால்,மனிதன் ஏதாவது ஒரு பாதையில் நடந்து கொண்டே இருக்க வேண்டும்.

அவன் தீர்மானமில்லாமல் ஒரே இடத்திலேயே நிற்கக்கூடாது.அப்படிச் செய்தால் அவனால் அந்த மலை உச்சியை அடைய முடியாது.அது சரியான பாதையாக இருந்தாலும் சரி.

ஆனால்,ஒருவன் தவறான பாதையை தேர்ந்தெடுத்து அதில் மேலே மேலே நடந்து சென்றால் அவனால் அதன் உச்சியை நிச்சியம் அடைய முடியும்.

இன்றைக்கு இல்லாவிட்டாலும்,
நாளைக்காவது.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது,அவன் தொடர்ந்து நடந்து கொண்டே இருப்பதுதான்.

அப்படி அவன் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தால் அவனால் சரியான பாதைக்கு தன்னை மாற்றிக் கொள்ளவும் முடியும்.

ஆகவே நான் உங்களை நடந்து கொண்டே இருங்கள் என்று சொல்கிறேன்.

அப்படி அவர்களுடைய பாதையில் நடக்கும்பொழுது,ஒவ்வொருவருக்கும் உதவி செய்ய நான் காத்திருக்கிறேன்.

--ஓஷோ--

Comments