Google

இந்த பிரபஞ்சம் குழப்பமானதாக இல்லை




கடவுள் என்னும் அந்தக் கருத்தானது உங்களுக்கு ஒரு நிம்மதி உணர்வை கொடுக்கிறது. அதாவது நீங்கள் தனியாக இல்லை, யாரோ ஒருவர் உங்களது வேலைகளைப் பார்த்துக் கொள்கிறார். 

இந்த பிரபஞ்சம் குழப்பமானதாக இல்லை. இது உண்மையிலேயே பிரபஞ்சமாக உள்ளது. இதற்கு பின்னால் ஒரு அமைப்பு முறை இருக்கிறது. இதற்கு பின்னர் ஒரு தர்க்க வாதம் இருக்கிறது; தர்க்க வாதமற்ற விஷயங்களின் தாறுமாறான கவலை அல்ல அது, இது ஒரு ஒழுங்கின்மை அல்ல. 

யாரோ ஒருவர் இதை ஆட்சி செய்கிறார். அந்த அரசர் ஒவ்வொரு சிறிய செயல்களையும் கூட கவனித்து செய்கிறார். அவர் அறியாமல் ஒரு இலை கூட அசையாது. எல்லாமே திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாபெரும் விதியின் ஒரு அங்கம்தான் நீங்கள். அதன் அர்த்தம் உங்களால் அறியப்படாமல் இருக்கலாம். ஆனால் அதில் அர்த்தம் உள்ளது. ஏனெனில் கடவுள் அங்கே இருக்கிறார். கடவுள் உங்களுக்கு அளவு கடந்த நிம்மதியை கொண்டு வருகிறார். வாழ்க்கை என்பது ஒரு விபத்து அல்ல என்று ஒருவர் உணர்கிறார். இங்கே சிறப்பும், அர்த்தமும், விதியும் உள்ள ஒரு உள் நீரோட்டம் ஓடிக் கொண்டிருக்கிறது. கடவுள் விதி என்னும் உணர்வைக் கொண்டு வருகிறார்.

இங்கே கடவுளே இல்லை - இது மனிதன் தான் இங்கு ஏன் இருக்கிறான் என்பதை அறியாமல் இருப்பதையே காட்டுகிறது. மனிதன் ஆதரவற்றவன் என்பதையே இது காட்டுகிறது. மனிதனுக்கு எந்த ஒரு அர்த்தமும் கிடைக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. கடவுள் என்னும் கருத்தை உருவாக்குவதன் மூலம் அவன் அர்த்தத்தை நம்ப முடியும். மேலும் இந்த வாழ்க்கையே யாரோ ஒருவர் கவனித்துக் கொள்கிறார் என்னும் எண்ணத்துடன் அவனால் இந்த பயனற்ற வாழ்க்கையை வாழ முடிகிறது.

இதை கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் ஆகாய விமானத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள். அப்போது யாரோ ஒருவர் வந்து "இங்கே விமானி இல்லை"என்கிறார். திடீரென்று உடனே அங்கே பெரும் அச்சம் வந்து விடும். விமானி இல்லையா? விமானி இல்லை என்றால் நீங்கள் அவ்வளவுதான். 

அப்போது வேறு யாரோ ஒருவர் "கண்ணுக்குத் தெரியாமல் விமானி அங்கு இருக்கத்தான் வேண்டும். நம்மால் விமானியை பார்க்க முடியாமல் இருக்கலாம். ஆனால் அவர் அங்கே இருக்கிறார். இல்லையெனில் இந்த அழகான இயந்திர ஓட்டம் எப்படி வேலை செய்யும்? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். எல்லாம் நல்லபடியாக அழகாக போய்க் கொண்டிருக்கிறது. எனவே விமானி இருந்தாக வேண்டும்; அவரை நம்மால் பார்க்க முடியாமல் இருக்கலாம் அவரைப் பார்ப்பதற்கான பிரார்த்தனை நிறைந்தவர்களாக நாம் இன்னமும் இல்லாமல் இருக்கலாம், நமது கண்கள் மூடி இருக்கலாம் ஆனால் விமானி அங்கே இருக்கிறார். இல்லையெனில் இது எப்படி சாத்தியப்படும்? இந்த விமானம் மேலே எழுந்துவிட்டது. இது நன்றாக பறந்து கொண்டிருக்கிறது; அதில் உள்ள இயந்திரத்தின் சப்தம் கேட்கிறது. இவைகள் எல்லாம் அங்கு ஒரு விமானி இருக்கிறார் என்பதற்கான நிரூபணங்கள்" என்று அந்த மனிதர் கூறினார்.

இப்படி யாராவது உங்களை சமாதானப்படுத்தும் போது நீங்கள் உங்களது நாற்காலியில் ஓய்வாக இருப்பீர்கள். உங்களது கண்களை மூடிக் கொண்டு நீங்கள் மீண்டும் கனவு காண ஆரம்பிப்பீர்கள். நீங்கள் தூங்கலாம். விமானி அங்கே இருக்கிறார். நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் கிடையாது.

விமானி இல்லை, இது ஒரு மனிதனின் படைப்பு. மனிதன் தனது உருவத்திலேயே கடவுளை உருவாக்கி விட்டான். இது மனிதனின் கண்டுபிடிப்பு. கடவுள் என்பது வெளிக் கொண்டுவரப்பட்ட ஒன்று அல்ல. அது ஒரு கண்டுபிடிப்பு. மேலும் கடவுள் என்பது சத்தியமும் அல்ல. இங்கு உள்ளதிலேயே இதுதான் மிகப் பெரிய பொய்.

--ஓஷோ--
Learning Happiness. Ch#1

Comments