தந்த்ரா தியானம் என்றால் என்ன?
தந்த்ரா தியானம் என்றால் என்ன?
{தந்திர சாஸ்திரத்தில் ஆதி யோகி சிவனால் அளிக்கப்பட்ட குண்டலினி ரகசியங்கள், உண்மையான தியான நுட்பங்கள், அபூர்வ யோக சாதனைகள் அனைத்தையும் தொகுத்து இன்று நம் அன்பர்களுக்காக முழுமையாக தருகிறேன். புரிய கூடியவங்க புரிஞ்சி கொள்ளுங்கோ....? }
தட்சிணாசார தந்திர யோகத்தில் "மைதுனம்" என்பது, உடலின் உள்ளே இருக்கும் சக்தியும் சிவனும் (பெண் சக்தியும், ஆண் சக்தியும்) ஒன்றாக இணைவதே என்பதையும்; அதை சாதிப்பதற்கான தந்திர யோக வழிமுறைகள் எவை என்பதையும்
சுருக்கமாகக் இன்று பார்ப்போம். இந்த ஆண் சக்தி- பெண் சக்தி இணைப்பு குறித்து இப்போது சற்றே
விரிவாகக் காணலாம்.
பெண் சக்தி- குண்டலினி
----------------------------------------------
நமது உடலில் "குண்டலினி' எனும் மாபெரும் சக்தி தூங்கிக் கொண்டிருக்கிறது. இது நமது முதுகுத் தண்டின் கீழ்ப்பகுதியில் மூலாதாரச் சக்கரத்தின் அருகில் ஒரு பாம்பு சுருண்டு கிடப்பது போன்று தூக்க நிலையில் இருப்பதாக தந்திர யோக நூல்கள் கூறுகின்றன.
குண்டலினி சக்தியே நமது உடலிலுள்ள
"பெண் சக்தி" அல்லது எதிர்சக்தி. (சங்ஞ்ஹற்ண்ஸ்ங் ஊய்ங்ழ்ஞ்ஹ்). இந்த சக்தி உடலின் கீழ்ப்பகுதியிலிருந்து மேல்நோக்கிச் செல்லும் தன்மை கொண்டது.
சக்கரங்கள் இயங்கத் தேவையான சக்தியை குண்டலினியே தருகிறது. குண்டலினி சக்தியை உறங் கிக்கிடக்கும் சக்தி என்று கூறினாலும்கூட, சாதாரண மனிதர்களுக்கும் சிறிய அளவில்
குண்டலினி சக்தி பாய்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த சக்தி பாய்வதால்தான் சக்கரங்கள் இயங்குகின்றன.
உதாரணமாக முத்திரைகள், யோகாசனங்கள், மந்திரங்கள், யந்திரங்கள் இந்த வழிமுறைகளில்
குண்டலினி சக்தியைத் தட்டி எழுப்பும் போது, தூங்கிக் கிடக்கும் குண்டலினி சக்தி மெள்ள மெள்ள எழத்துவங்கும்.
அதிக அளவில் குண்டலினி பாயத் துவங்கும்போது, அதன் அளவிற்கு ஏற்ப சக்கரங்களின் செயல்திறனும் அதிகரிக்கும்.
மூலாதாரத்திலிருந்து மேலெழும் குண்டலினி சக்தி முதலில் மூலாதாரச் சக்கரத்தைத் தூண்டிவிட்டு அதன் செயல்திறனை அதிகரிக்கும். மூலாதாரச் சக்கரம் ஒரு குறிப்பிட்ட அளவிற்குத் தூண்டப்பட்ட பின்னரே குண்டலினி சக்தி அந்த சக்கரத்தைத் தாண்டி அடுத்த சக்கரமான சுவாதிஷ்டானத்திற்குள் நுழையும்.
சுவாதிஷ்டானத்தின் இயக்கம் சீரடைந்து, தூண்டப்பட்டு, ஒரு குறிப்பிட்ட அளவிற்குமேல்.அதிகமாக இயங்கத் துவங்கும்போது, குண்டலினி சுவாதிஷ்டானத்திலிருந்து அதற்கு மேலேயுள்ள மணிப்பூரகச் சக்கரத்தைச் சென்றடையும்.
மூலாதாரம், சுவாதிஷ்டானம் ஆகிய இரு சக்கரங்களிலும் குண்டலினியை எளிதாகக் கொண்டு சென்றுவிடலாம். தந்திர யோகத்தில் ஈடுபடும் பலருக்கும் இது எளிதாக நடைபெற்றுவிடும். ஆனால் சுவாதிஷ்டானத்தைத் தாண்டி மணிப்பூரகச் சக்கரத்திற் குள் குண்டலினியைக் கொண்டு செல்வதுதான் சற்றே சிரமமான காரியம்.
குண்டலினி மணிப்பூரகத்தைச் சென்றடையும் வரையில், பல மாதங்கள் அல்லது வருடங்கள் குண்டலினி மூலாதாரத்திற்கும் சுவாதிஷ்டானத்திற்கும் இடையே மேலும் கீழுமாக ஊசலாடிக் கொண்டேயிருக்கும்.
வெகு அரிதாக, சில பயிற்சிகளின்போது
குண்டலினி மணிப்பூரகத்தை அடைந்தாலும் உடனே கீழே இறங்கிவிடும். தொடர்ந்த பயிற்சிகளின் மூலம் மூலாதாரத்திலிருந்து குண்டலினியை எழுப்பி, சுவாதிஷ்டானத்தையும் கடந்து, மணிப்பூரகச் சக்கரத்தினுள் நிலைகொள்ளச் செய்துவிட்டால் பின்னர் அது கீழே இறங்காது!
மூலாதாரமும், சுவாதிஷ்டானமும் கீழ்நிலைச் சக்கரங்கள். (பூமி சார்ந்த சக்கரங்கள்). இவற்றின் ஆளுமையில் இருக்கும்வரை மனிதனின் சிந்தனைகளும் செயல்களும் பூமி சார்ந்தவையாகவே இருக்கும்.
சுவாதிஷ்டானத்தின் ஆளுமையிலிருந்து விடுபட்டு இடைநிலைச் சக்கரமான மணிப்பூரகத்தினுள் குண்டலினி நுழையும்போது மனிதனின் உணர்வுகளும் சிந்தனையும் மனித
நிலையிலிருந்து மேம்பட்ட ஒரு நிலையை அடையும்.
மணிப்பூரகம், அனாஹதம், விஷுதி ஆகிய மூன்று சக்கரங்களும் இடைநிலைச் சக்கரங்களாகும்.
குண்டலினி மணிப்பூரகத்தை அடைந்த பின்னர் அடுத்ததாக அனாஹதம், விஷுதி ஆகிய சக்கரங்களுக்குச் செல்லும். பயிற்சிகளைத் தொடர்ந்து செய்யும்போது குண்டலினி இந்த
மூன்று சக்கரங்களுக்கு இடையே மேலும் கீழுமாகச் சென்றுகொண்டிருக்கும்.
விஷுதியைத் தாண்டிச் செல்ல கடினமான, தொடர்ந்த பயிற்சிகள் தேவையாக இருக்கும். விஷுதியைத் தாண்டிச் செல்லும்போதுதான்
உயர்நிலைச் சக்கரமான ஆக்ஞை தூண்டப்படும்.
இந்நிலையில்தான் திரிகால ஞானம், பரமஹம்சநிலை போன்றவை உருவாகும். சக்கரங்களும் உணர்வு நிலைகளும் ஒவ்வொரு சக்கரமும் குறிப்பிட்ட சில உணர்வு நிலைகளோடு இணைக்கப்பட்டுள்ளன.
குண்டலினி ஒரு சக்கரத்தினுள் நுழைந்து அதைத் தூண்டும்போது, அந்த சக்கரத்தோடு தொடர்புடைய
உணர்வு நிலை களும் தூண்டப்படும்.
ஒரு மனிதன் எத்தகைய உணர்வு நிலையில் இருக்கிறான் என்பதை வைத்தே அவன் எந்த சக்கரத்தின் ஆளுமையில் உள்ளான் என்பதைக்
கூறிவிட முடியும் இது தவிர பருவுடலிலும் சக்தி உடல்களிலும்கூட பல மாற்றங்கள் நிகழும். இந்த மாற்றங்கள் சக்கரத்திற்கு சக்கரம்
மாறுபடும்.
சித்திகள்
------------------
குண்டலினி ஒரு சக்கரத்தினுள் நுழைந்து, அதைத் தூண்டித் திறக்கச் செய்யும்போது, அந்த சக்கரத்தோடு தொடர்புடைய சில சித்திகள் கிடைக்கக் கூடும். ஆனால் சித்திகளைப் பெறுவது தந்திர யோகத்தின் குறிக்கோள் அல்ல. சித்திகளிலே மதிமயங்கி தங்கிவிடுபவர்களால் ஆன்மிகப் பாதையில் தொடர்ந்து முன்னேற முடியாது. ஆக, சித்திகள் என்பவை உங்களது ஆன்மிகப் பாதையில் போடப்படும் வேகத்தடைகளே.
குண்டலினியும் நாடிகளும் நமது உடலிலுள்ள நாடிகளில் சுழுமுனை, இடகலை, பிங்கலை ஆகிய
மூன்று நாடிகளே முதன்மை நாடிகள் எனப்படுகின்றன.
குண்டலினி சக்தி மேலே எழும்போது, இந்த மூன்று நாடி களில் ஒரு நாடி வழியாகவே மேலே எழ முடியும்.
ஒவ்வொரு நாடி யிலும் வெவ்வேறு விதமான விளைவுகள் தோன்றும். சுழுமுனை நாடியில் குண்டலினி நுழைந்து மேலே எழும்பினால் மட்டுமே அது சகஸ்ரார சக்கரத்தை அடைந்து,
கபாலத்தில் இருக்கும் ஆண் சக்தியான
சிவத்துடன் இணைய முடியும். தந்திர யோக மைதுனம் நிகழும்.
பிற இரு நாடிகளும் (இடகலை, பிங்கலை) ஆக்ஞை சக்கரத்துடன் முடிந்துபோகும்.
எனவே இந்த நாடிகளில் ஒன்றின் வழியாக குண்டலினி எழுந்தால் தந்திர யோக மைதுனம் நிகழாது. வேறு வகையான பலன்கள் கிடைக்கும்.
சக்தி- சிவம் இரண்டும் இணைந்து தந்திர யோக மைதுனம் உடலினுள் நிகழும்போதுதான் எல்லையற்ற "பரமானந்த நிலை" யும், அதற்கு அடுத்தபடியான "முக்தி" நிலையும்
கிடைக்கும். இதற்கு முறையான, தொடர்ந்த பயிற்சிகள் அவசியம்.
சிலவகை தந்திர யோகிகள் சுழுமுனை நாடியில் குண்டலினி செல்வதைத் தவிர்த்து, இடகலை அல்லது பிங்கலை நாடிகளின் வழியே குண்டலினியை எழுப்புகிறார்கள்.
இதற்கு தனியான விசேஷ பயிற்சிகள் உள்ளன.
இந்தப் பயிற்சிகள் அனைத்துமே மிக உயர் நிலை பயிற்சிகளாகும். ஒரு குருவிடமிருந்தே நேரடியாக இவற்றைக் கற்றுக்கொள்ள முடியும்.
சரியான முன் தயாரிப்புகளும், வழிகாட்டுதலும்
இன்றி இவற்றில் ஈடுபட்டால் விளைவுகள்
விபரீதமாக இருக்கும். தந்திர யோகப் பயிற்சிகள் அனைத்துமே மிகமிக சக்திவாய்ந்தவை. குறிப்பாக
குண்டலினியை எழுப்பும் பயிற்சிகள் தீயுடன்
விளையாடுவது போன்றது. கவனமாக
இல்லையெனில் சுட்டுவிடும்! ஒரு சிறந்த
குருவின் மேற்பார்வையிலேயே இவற்றைத்
துவங்க வேண்டும்.
திபெத்தில் கடந்த முறை நான் சென்ற தந்திர யோகப் பயிற்சி வகுப்புகளில் இந்த பயிற்சிகளை நான்கு நிலைகளாகக் கற்றுத்
கொடுத்தார்கள் திபெத்திய லாமாக்கள். தொடர்ந்த, முறையான பயிற்சிகளின் மூலமே இவற்றை சாதிக்க முடியும். குருவின் ஆசிகளும் இறைவனின்
அருளும் வேண்டும்.
தந்திர யோகம் கூறும் சூட்சும உடல் பருவுடல்- சூட்சும உடல் என இரு உடல்கள் நமக்கு உள்ளன. நமது புலன்களால் உணரக்கூடியதே பருவுடல். பருவுடல் குறித்த உண்மைகளை மிக நுட்பமாக நவீன விஞ்ஞானம் ஆராய்ந்துவிட்டது. ஆனால் பல
சூட்சும உடலின் ரகசியங்கள் இன்னமும்
விஞ்ஞானத்திற்கு பிடிபடாத ஒன்றாகவே உள்ளது.
விஞ்ஞானத்தால் இதுவரையில் கண்டுபிடிக்க
முடியாத சூட்சும உடலின் ரகசியங்களை பல்லாயிரம்
ஆண்டுகளுக்கு முன்னரே "மெய்ஞ் ஞானத்தால்'
நம் முன்னோர்கள் கண்டுபிடித்து விட்டனர்.
இந்த மெய்ஞ்ஞான உண்மைகளே தந்திர யோகப்
பயிற்சிகள் அனைத்திற்கும் ஆதாரமாக உள்ளன.
நீங்கள் தந்திர யோகம் கற்றுக்கொள்ள வேண்டுமானால் முதலில் நமது சூட்சும உடல்
குறித்து முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும்.
✷ குண்டலினி சக்தி
✷ சக்கரங்கள்
✷ நாடிகள்
✷ சக்தி உடல்கள்
ஆகியவை குறித்த முழுமையான புரிதல் இருந்தால் மட்டுமே தந்திர யோகப் பயிற்சிகளை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.
சித்தர்களில் ஓரிருவர் தவிர ஏனையோர் இல்லறம் நடத்தியே வாழ்ந்துள்ளனர். யோகமார்க்கத்தில்
மெய்யறிவு பெற்று இறைநிலை அடைவதை
மட்டுமல்ல, இல்லறத்தில் வாழ்வோர்களும்
எல்லா விஷயங்களையும் இறையுணர்வோடு செய்து இறைநிலை அடைய முடியும் என்று வாழ்ந்து காட்டி அதற்கான வழிகளையும் சொல்லியிருக்கிறார்கள். சிற்றின்பமாகட்டும், பேரின்பமாகட்டும் அதாவது யோகமானாலும், போகமானாலும் இரண்டிலும் உபயோகப் பொருள் விந்துதான்.
நாம் உண்ணும் உணவிலிருந்து ஏழு தாதுக்கள்
பெறப்பட்டு உருவாவது இந்த தேகம். சாரம்,
செந்நீர், ஊன், கொழுப்பு, எலும்பு, மூளை,
வெண்ணீர் என்ற ஏழாகும். அதாவது இரசம்,
இரத்தம், மாமிசம், மேதசு, அத்தி, மச்சை,
சுக்கிலம் என்றும் சொல்வார்கள். சாரம்,
செந்நீர், வெண்ணீர் இம்மூன்றும் ஒருநாள் ஒரு புல்லின் நுனியில் நிற்கும் பனித்துளி போல் திரண்டு நிற்கும் என்றும்.
அத்திரட்சியே விந்து என்றும் இது 21 நாட்கள்
வரை உடம்பில் வளரும் என்றும் திருமூலர்
சொல்கிறார்(திருமந்திரம் -1934). மனித
உடலை உருவாக்குவது நாதபிந்துக்கள். இந்த
நாதபிந்துக்களை உருவாக்குவது அன்னம்.
எனவேதான் இது அன்னத்தாலாகிய உடம்பாகிய
அன்னமய கோசம் எனப்படுகிறது.
ஆண்களுக்கு பிந்து நாதமும், பெண்களுக்கு சுரோணித நாதமும் உருவாகிறது. இந்த விந்தானது மூன்று நாட்கள் உடல் விந்தாகவும், பிறகு மன விந்தாகவும் மாற்றமடையும் என்றும், அதை கலையாகிய அறிவு விந்தாக அமைத்து புருவ மத்தியில் தியானித்து இருப்பவர்களுக்கு உடலைவிட்டு நீங்காது என்றும்,
உலக இல் வாழ்வில் பற்று கொண்டோர்களுக்கு
மனதுடன் அழியும் அல்லது கழிவாகி வெளியேறும்
என்றும் சொல்லப்பட்டுள்ளது.
அழிகின்ற விந்து அளவை யறியார் கழிகின்ற
தன்னையுட் காக்கலுந் தேரார் அழிகின்ற காயத்
தழிந்தயர் வுற்றோர் அழிகின்ற
தன்மை யறிந்தொழி யாரே - (தி ம - 1936)
இவ்வாறு வீணே கழியும் விந்தின் பெருமையை உணராதவர்கள் அதை வீணாக்கி உடலையும் மனதையும் நாசம் செய்கின்றனர். ஒரு துளி விந்தில் 80 துளி வெண்ணீர் துளிகள் உள்ளன.
ஒரு வெண்ணீர் துளி 80 துளி இரத்தத்தின் சாறு ஆகும். ஆக ஒரு துளி விந்து அழிந்தால் 6400 துளி இரத்தம் வீணாகிறது என்பது யாருக்கும்
தெரிவதில்லை.
இதனால் உடலும் தளரும் என்பதை யாரும் உணர்வதுமில்லை. ஆனால் காமசக்தியான விந்து சக்தியையும், காம உணர்ச்சியையும், புணர வேண்டும் என்கிற ஆசையையும் மனிதன்ஓரளவுக்கு மேல் அடக்க முடியாது,
அடக்கவும் கூடாது.
அவ்வாறு அடக்கும் போது விளைவுகள்
மோசமாகும். மனநோய் உருவாகலாம். சரி அதிகமாகப் புணர்ந்தாலோ உடல் நலம்?
கெடும். என்னதான் செய்யலாம் என்று
சிந்தித்த சித்தர்கள் அதற்கென சில வழிமுறைகளைக் கண்டு பிடித்தனர். வஜ்ரோலி முத்திரை, பரியங்க யோகம் போன்ற சில
யோகங்களே அவைகள். உலகியல்
வாழ்வின்படி மணம் செய்து கொண்ட யோகியர்
பெண்ணிடம் சேர்ந்தாலும் உடல்கள் சங்கமிக்குமே அல்லாது உள்ளம் சிவனிடத்து இருக்குமாகையால்
விந்து கழியாது.இதற்கு இருபாலினருக்கும் பயிற்சியும் ஒருங்கிணைந்த மனப் போக்கும்
அவசியம்.
இதுவே நற்போகமென்றும், இதனால் விரைவில்
குண்டலினி மகாசக்தி மகிழ்ந்து மேலேறுவாள்
என்று சொல்லப்பட்டுள்ளது. இத்தகைய
யோகியர் மக்கட்பேறு வேண்டி விந்துவினை
விடுவார்களே அன்றி, காதல் வயப்பட்டு அதிகம் விடமாட்டார்கள். விந்துவினை மூலதாரத்தில் அனலால் செம்மையுறச் செய்து, அங்கிருந்து தொப்புள் முதல் நெஞ்சம் வரையுள்ள சூரிய
மண்டலத்துக்கு வலது நாடி வழியாக ஏற்றி, அங்கிருந்து நெற்றி வரை இடப்பால் நாடி வழியாக ஏற்றி சந்திர மண்டலம் சேர்ந்து அமுதம் உண்ணலாம். இந்த வேளையில்
மேலேறும் விந்துவைக் கட்டும் வழி உள்ளது.
திருவருட் சக்தியின் துணை கொண்டு மூலத்திடை விளங்கும் அனலை எங்கும் போகமாட்டாமல் சிவசிவ என்னும் நான்மறையால் கைவரச் செய்து யோகியானவர் தன் வாழ்க்கைத் துணைவியாம் பெண்ணின் செந்நீராம் நாதத்துடன் தன் நடுநாடி வழியாக விந்துவாம் வெண்ணீரைச் செலுத்தினால்
அவ்விந்து கட்டுப்படும்.
இதை ஒவ்வொரு ஆதாரமாக மேலேற்றுவார்களாம். இதற்கு நெற்றி வழியாக அருந்தும் சந்திர அமிர்தமும் துணை நிற்கும். ஆரம்ப நிலையில் குண்டலினி யோகம் செய்கிறவர்களுக்கு ஏற்படும் அதிகபட்சமான வீரியத்தை சமநிலைக்கு கொண்டுவர பெண் சம்போகம் தேவையாகும். பிறகு அவர்கள் வஜ்ரோலி முத்திரை மூலமாக
விந்து விரையமாகாமல் போகம் செய்து,
அதையும் சிவயோகமாகச் செய்து இருவரும்
மேன்மை அடைவர். வஜ்ரோலி முத்திரை
தேர்ந்த குரு மூலம் கற்றுக் கொள்ள
வேண்டியது அவசியம்.இதில் பயிற்சியாளர்
முதலில் தண்ணீரை ஆண்குறி மூலமாக
உள்ளிழுக்க பயிற்றுவிக்கப்படுவார்.
பிறகு பாலை உள்ளிழுக்க பயில வேண்டும்.
பிறகு தேன். இந்த மூன்றிலும் நன்கு தேர்ச்சி பெற்றவர்களை பாதரசத்தை உள்ளிழுக்கப்
பயிற்றுவிப்பார்கள்.
இதனால் என்ன பயன் என்றால் சம்போகம்
செய்யும் போது விந்து வெளியேறினாலும்,
அடுத்த நொடியே மூச்சுப் பயிற்சியினாலும்,
வயிற்றுத் தசைகளைச் செயல் படுத்தியும்
அடிவயிற்றில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி,
வெளியைறிய விந்துவை உள்ளே இழுத்து விடுவார்கள்.
எனவே மனதின் இச்சையையும் தீர்த்துக்
கொண்டு, விந்துவையும் விரையமாகாமல்
காத்து தேகத்தை வலுவாக்கிக் கொள்ளலாம்.
இது மிகவும் கடுமையான பயிற்சியாகும்.
விளையாட்டாக எதுவும் செய்தால் விபரீதமாகிவிடும். குரு அவசியம். இதில்
தேர்ச்சி பெற்ற குருவெல்லாம் அவ்வளவு எளிதில் வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் இன்றைய காலகட்டங்கள் சரியில்லை. இதைப் பயன்படுத்தி தவறு செய்பவர்களே அதிகம்
காணப்படுவார்கள் என்பது மறுக்க முடியாத
உண்மை. மாதம் இருமுறை சம்போகம்
செய்பவர்களுக்கு இதெல்லாம் தேவையில்லை என்பதே சித்தர்கள் வாக்கு.
யோக மார்க்கத்தில் மேன்மையடைய சம்போகத்தையே பயன்படுத்தும் தாந்திரீக யோகமும் உண்டு. அதாவது மன உணர்வினை உடலில் அனுபவித்து, விந்தை வெளிவிடாது மனதை ஒரு நிலைப்படுத்துவர். கடும் பயிற்சிக்குப் பின் இருவருடைய ஒத்துழைப்பின் அடிப்படையில் இந்தக் கலை சிறக்கும்.
இந்த நிலையில் யோகியானவர் யோகாசனம்
தெரிந்த பெண்ணோடு உடல் அதிக உஷ்ணமடையாத வண்ணமும், சுவாசம் தறிகெட்டு ஓடாத வண்ணமும் சுவாச முறைகளைக் கையாண்டு நீண்ட நேரம் சம்போகம் செய்வார். இந்த நேரத்தில் காம உணர்வோடு கூடாமல், சிந்தையை புருவ மத்தியில் திரட்டி, விந்தை வெளியே விடாமல் நீண்ட நேரம் கூடி உள்ள
உணர்வுகளை ஒருங்கிணைத்து தெய்வநிலை
அடைவர்.
உடல் புணர்ச்சி நிலையில் திளைத்திருந்தாலும்
மனம் மட்டும் புருவ மத்தியிலேயே நிலைத்திருக்கும். இதனால் குண்டலினியானது வெளியே கிளம்பும். போகத்தால் குண்டலினியைக் கிளப்புவர். இதில் பெண்ணும் ஒத்துழைத்து மனதை புருவ மத்தியில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இல்லையெனில் மனதை ஏதாவது ஒரு ஆதாரத்தில்
நிறுத்தலாம்.
( குண்டலியானது சுவாதிட்டானத்திலிருந்து மணிபூரகத்துக்கு ஏறுவதில் சிரமம் இருப்பதை உணரமுடியும். அதே சமயத்தில் ஆற்றல் விர்த்தியாவதால் திரேதாயின் மயக்கத்தால் (காம உணர்ச்சியால்) பெண் இச்சையில் வீழ்ந்து விடக்கூடாது என்று சித்தர்கள் எச்சரிக்கிறார்கள். பரியங்க யோகம் முதலியவற்றால் அனுபவ நுட்பம் தெரியாமல் விந்தை மேலேற்றும் முயற்சியில் ஈடுபட்டால் வெட்டை முதலிய நோய்க்கு ஆளாக நேரிடும். அதற்கு உயர்ந்த கற்ப மருந்துகளை மேற்கொள்ளல் அவசியமாகும். இன்னும் உயர்ந்த முறையில் செய்த ரசக்குளிகைகளோ , ரசமணிகளோ பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் அவ்வகை யோகங்கள் சாத்தியப்படும். மேலும் முறையான தீட்சை பெற்றிருக்க வேண்டும். யோகம் விருத்தியடையும் காலத்தில் உடம்பில் பல நோய்கள் வரும். அவற்றை எல்லாம் போக்கும் வகையில் ஔஷங்களை அனுசரிக்க வேண்டும்.)
இவை அனைத்தும் பல தந்திர நூல்களில் இருந்து தொகுக்க பட்டவை.
Comments
Post a Comment