சிரிப்பதைக் கற்றுக் கொள்வது மகத்தானது.
சிரிப்பதைக் கற்றுக் கொள்வது மகத்தானது.
சிரிப்பு ஒரு மகத்தான மருந்து.
அது உங்களது இறுக்கங்கள், கவலைகள், துயரங்கள் பலவற்றையும் சரி செய்து விடும்.
சிரிப்பினுள் முழு சக்தியும் வழிந்தோட முடியும்.
ஏதாவது ஒரு காரணம் இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை.
எனது தியான முகாம்களில் நான் ஒரு சிரிப்பு தியானத்தை ஏற்படுத்தி இருந்தேன்.
காரணமின்றி மக்கள் உட்கார்ந்து சும்மா சிரிக்கத் தொடங்குவார்கள்.
முதலில், காரணமில்லையே என்று சற்றே சங்கடப்படுவார்கள்.
ஆனால் எல்லோரும் அதைச் செய்யும் போது, அவர்களும் தொடங்குவார்கள்.
விரைவில் எல்லோருமே பலமாகச் சிரித்துக் கொண்டும், தரையில் உருண்டு புரண்டு கொண்டும் இருப்பார்கள்.
காரணமின்றி அத்தனை பேர் சிரித்துக் கொண்டு இருக்கிறார்களே என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
அங்கே எதுவுமே இருப்பதில்லை.
ஒரு ஜோக் கூடச் சொல்லப்படவில்லை.
அது அலைகளைப் போலத் தொடர்ந்து பரவியது.
எனவே இதில் தவறு ஏதுமில்லை.
உங்கள் அறையில் அமர்ந்து, கதவுகளை மூடி விட்டு, ஒரு மணி நேரம் சும்மா சிரியுங்கள்.
உங்களைக் கண்டே சிரியுங்கள்.
ஆனால் சிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
தீவிரமாக இருப்பது ஒரு பாவம்.
அது ஒரு வியாதி.
சிரிப்பில் மகத்தான அழகு. ஒரு லேசான தன்மை உள்ளது.
அது உங்களுக்குள் லேசான தன்மையைக் கொண்டு வரும்.
உங்களுக்குப் பறப்பதற்கு சிறகுகளைத் தரும்.
வாழ்க்கை வாய்ப்புகள் நிறைந்தது.
உங்களுக்கு உணர்நிலை மட்டுமே தேவை.
பிறர் சிரிப்பதற்கு வாய்ப்புகளை உருவாக்குங்கள்.
மனிதர்களின் குணங்களிலேயே, சிரிப்பு தான் மிகவும் மதிக்கப்படும், போற்றப்படும் ஒரு குணமாக இருக்க வேண்டும்.
ஏனெனில் மனிதனால் மட்டுமே சிரிக்க முடியும்
வேறு எந்த விலங்கினாலும் அது முடியாது.
அது மனிதத்தன்மையாக இருப்பதால், அது நிச்சயம் உயர்ந்த ஒன்றாக இருக்க வேண்டும்.
அதை அடக்குவது என்பது ஒரு மனிதப் பண்பை அழிப்பது ஆகும்.
--ஓஷோ.
Comments
Post a Comment