Google

ஒருவர் தன் அன்றாட வாழ்க்கையை எந்த முறையில் வாழ வேண்டும்?



அன்பர்: நான் ஒரு கேள்வி கேட்கலாமா? ஒருவர் தன் அன்றாட வாழ்க்கையை எந்த முறையில் வாழ வேண்டும்?

கிருஷ்ணமூர்த்தி: உயிர் வாழ அந்த ஒரே ஒரு நாள் மட்டுமே, ஒரே ஒரு நேரம் மட்டுமே இருப்பதாக எண்ணி வாழ வேண்டும்.

அன்பர்: எப்படி?

கிருஷ்ணமூர்த்தி: ஒரே ஒரு மணி நேரம் தான் உயிரோடு இருக்கப் போகிறீர்கள் என்ற நிலையில் என்ன செய்வீர்கள்?

அன்பர்: எனக்குத் தெரியவில்லை.

கிருஷ்ணமூர்த்தி: உயில் எழுதுவது போன்ற உங்கள் வாழ்க்கையின் இன்றியமையாத விவகாரங்களையெல்லாம் செய்து முடிக்க ஏற்பாடுகளை செய்ய மாட்டீர்களா?

உங்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும் அழைத்து நீங்கள் அவர்களுக்கு தீங்கு இழைத்ததாக நினைத்தற்கு, அவர்களிடம் மன்னிப்பை கேட்க மாட்டீர்களா? அதுபோலவே, அவர்கள் உங்களுக்கு தீங்கு செய்துவிட்டதாக நீங்கள் எண்ணியதற்கு அவர்களை  மன்னித்து விட மாட்டீர்களா?

மனதில் போட்டு வைத்த விஷயங்களுக்கும் ஆசைகளுக்கும் உலக விவகாரங்களுக்கும் பூரணமாக ஒரு முற்றுப்புள்ளி வைக்க மாட்டீர்களா?

இதுபோன்ற செயல்களை வாழ்க்கையில் ஒரு மணி நேரத்திற்கு உங்களால் செய்ய முடியுமென்றால், எஞ்சியுள்ள நாட்களுக்கும் வருடங்களுக்கும் அவைகளை செய்ய முடியாதா என்ன?

அன்பர்: இவ்வாறு செயல்படுவது உண்மையிலேயே சாத்தியம் தானா?

கிருஷ்ணமூர்த்தி: முயற்சி செய்து பாருங்கள் உங்களால் கண்டுகொள்ள முடியும்.

J Krishnamurti 

COMMENTARIES ON LIVING SERIES III CHAPTER 55 'SORROW FROM SELF-PITY'

Comments