Google

உங்களைத் தவிர வேறு யாரும் உங்களை காப்பாற்ற முடியாது.



🌻 நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் உங்களைத் தவிர வேறு யாரும் உங்களை காப்பாற்ற முடியாது.

🌻கடவுள் என்று ஒருவர் இருந்து கொண்டு உங்களை கண்காணித்து, காப்பாற்றி வருகிறார் என்பது உங்கள் சிறு வயதில் உங்கள் மேல் திணிக்கப்பட்ட கருத்து.

🌻எப்பொழுதும் இந்தக் கருத்து சங்கிலியால் கட்டப்பட்டு இருக்கிறீர்கள்.

🌻இதிலிருந்து நான் உங்களை விடுவிப்பது எப்படி?

🌻நீங்கள் இதை புரிந்துகொண்டு விடுதலை பெற்றுக் கொள்ள வேண்டும்.

🌻ஆனால் நீங்கள் இந்த சங்கிலியை விரும்புகிறீர்கள், அதை தூக்கி எறிய பயப்படுகிறீர்கள், இது வேடிக்கையாக உள்ளது, உங்களுடைய துன்பத்திற்கும் நீங்கள்தான் காரணம்.

🌻இதை புரிந்து கொள்ளாமல் மறுபடியும் மறுபடியும் அந்த துன்பத்திற்கான விதை விதைத்துக் கொண்டே இருக்கிறீர்கள்.

🌻தண்ணீர் விட்டு வளர்ப்பார்கள் இப்படி இருக்கும்போது யார் உங்களை காப்பாற்றுவது? வேறு யார்? உங்களை எதற்காக காப்பாற்ற வேண்டும்?

🌻உங்களை காப்பாற்றுவது என் வேலை இல்லை.  நீங்கள் இப்படி இருப்பதற்கு நான் காரணம் இல்லை.  அது முழுக்க முழுக்க நீங்களாக ஏற்படுத்திக்கொண்டது. 

🌻நீங்கள்தான் முயன்று விடுதலை அடைய வேண்டும்.


,🌻ஓஷோ - வார்த்தைகளற்ற மனிதனின்வார்த்தைகள்.

Comments