உடலும் மனமும் வெங்காயம் போன்றவைகள்
நம்மால் இந்த உலகில் உள்ள எல்லோரையும் சந்தேகப் பட முடியும்...ஆனால் நாம் நம்முடைய மனதை ஒருபோதும் சந்தேகப் படுவதில்லை...
உன்னுடைய மனம் எதையாவது சொல்லும் போதெல்லாம் இரண்டு முறை யோசி...மனம்
உனக்கு மிகவும் நெருக்க மானது...இடைவெளி மிகவும் சிறியது...ஆகவே நீ உன்னை அதனோடு அடையாளப் படுத்திக் கொள்கிறாய்...
நீ பிறக்கும் போது மனமற்ற ஒரு ஜீவனாகவே பிறந்தாய்...பிறகு இந்த சமுதாயத்தால் உனக்கு மனம் கொடுக்கப் பட்டது..
மனம் அதனுடைய போக்கில் உன்னை தள்ளிக் கொண்டே போகிறது..உனது இறந்த கால அனுபவங்கள் மனதோடு சேர்ந்து கொள்கின்றன..
மனமும் இறந்த காலமும் சேர்ந்து உன்னுடைய நிகழ் காலத்தை அழித்துக் கொண்டு உள்ளன...நீ மனமற்ற நிலையை அடையும் போது இறந்த காலம் மறைந்து போகிறது...
இறந்த காலமும் எதிர் காலமும் மனதின்
பாகங்கள் ..உன் மனமும் உடம்பும் உன்னுடையது அல்ல...
உடலும் மனமும் வெங்காயம் போன்றவைகள்...
உரிக்க உரிக்க முடிவில் ஒன்றுமில்லாத
சூன்யம் தான் மிஞ்சும்..
ஓஷோ
தந்த்ரா ...
Comments
Post a Comment