மௌனம், என்கிற ஒரே மொழியை மட்டுமே கடவுள் புரிந்து கொள்கிறார்.
மௌனம், என்கிற ஒரே மொழியை மட்டுமே கடவுள் புரிந்து கொள்கிறார்.
இந்துக்கள் சமஸ்கிருத மொழியை கடவுளின் மொழியாக, தேவயானி என்று நம்பினாலும்கூட, கடவுள் சமஸ்கிருத மொழியையும் கூட புரிந்து கொள்ள மாட்டார்.
என்னதான் முகமதியர்கள் நம்பிக்கையோடு இருந்தாலும் கடவுள் அரபி மொழியையும்கூட புரிந்து கொள்ள மாட்டார்.
யூதர்கள் என்னதான் நம்பிக்கையோடு இருந்தாலும் கூட கடவுள் ஹீப்ரு மொழியைப் புரிந்து கொள்ள மாட்டார்.
இயேசு அராமிக் மொழியைப் புரிந்து கொண்டு அதைப் பேசி இருந்தாலும் கூட அவர் அராமிக் மொழியைப் புரிந்து கொள்ள மாட்டார்.
அவரது மொழி என்ன?
அவர் மௌனத்தை மட்டுமே புரிந்து கொள்கிறார்.
அவர் மௌனத்தைப் புரிந்து கொள்கிறார். மௌனத்தில் மட்டுமே உண்மையான பிரார்த்தனை இருக்கிறது.
எனவே நீங்கள் வார்த்தைகளின் மூலமாக பிரார்த்தனை செய்தால் நீங்கள் அவரை ஒருபோதும் சென்றடைய மாட்டீர்கள்.
உங்கள் பிரார்த்தனையானது ஒருபோதும் அவரைச் சென்றடையாது.வார்த்தைகள் மிகவும் கனமானவை.உங்களது பிரார்த்தனையானது உயரத்திற்கு எழுந்து இறுதியான ஒன்றினை அடைவதற்கு அவை உங்களை அனுமதிக்காது.
மௌனம் மட்டுமே சிறகுகளைப் பெறமுடியும்.
நீங்கள் கடவுளை அடைய விரும்பினால், நீங்கள் மௌனத்தின் பாதையை கற்றுக்கொள்ள வேண்டும்.
--ஓஷோ--
Comments
Post a Comment