Google

சிரிப்பு என்பது சமுதாயத்தால் அடக்கப்பட்டு வருகிற விசயமாகும் - Osho




😆 சிரிப்பு என்பது எல்லாக் காலங்களிலும் உலகின் எல்லாப் பகுதிகளிலும் சமுதாயத்தால் அடக்கப்பட்டு வருகிற விசயமாகும்.

சமுதாயம் நீங்கள் தீவிரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறது.

ஆசிரியர் பாடம் கற்பிக்கும்போதோ,

பெற்றோர் ஏதாவது சொல்லிக் கொண்டிருக்கும்போதோ

சிரித்தால்அவமரியாதையாகக் கருதப்படும்.

தீவிரமாக இருப்பது மரியாதை என்று எண்ணப்படுகிறது.

ஆனால் வாழ்க்கை தீவிரமான ஒன்று அல்ல

மரணம் தான் தீவிரமானது

வாழ்க்கை என்பது அன்பு, சிரிப்பு, ஆடல்,பாடல் தான்

கடந்த காலம் வாழ்வை முடமாக்கி உள்ளது

அது சிரிப்பைக் காண முடியாத மனிதர்களாக உங்களை ஆக்கி உள்ளது

நீங்கள் எப்போதும் துயரத்துடன் காணப்படுகிறீர்கள்

ஆனால்

உண்மையில் நீங்கள் காட்சி தருகிற அளவுக்கு துயரம் இருப்பதில்லை

துயரமும் தீவிரத்தன்மையும் ஒன்று சேர்ந்து உங்களை மிகவும் துயரத்துடன் இருப்பதாகக் காட்டுகிறது

துயரத்துடன் சற்றே சிரிப்பை சேருங்கள்

அப்போது நீங்கள் அத்தனை துயரத்துடன் காணப் பட மாட்டீர்கள்

வாழ்வை சற்றே கவனித்து நகைப்புக்குரிய விசயங்களைப் பாருங்கள்ப்

ஒரு நல்ல மனிதனின் அடிப்படைத் தன்மையாக நகைச்சுவை உணர்வு இருக்க வேண்டும்

தீவிரமாக இருப்பது ஒரு பாவம்

ஒரு வியாதி

சிரிப்பின் மகத்தான அழகு உங்களை லேசாக்கி பறக்க சிறகுகளைத் தரும்

பிறர் சிரிக்க வாய்ப்புகளை உருவாக்குங்கள்

மனிதர்களின் குணங்களிலேயே சிரிப்பு தான் மிகவும் போற்றப்படும் குணமாக இருக்க வேண்டும்

அதை அடக்குவது மனிதப் பண்பை அழிப்பதாகும் 😆

😍 ஓஷோ 😍

Comments