திருமணம் செய்துகொண்டவர்கள் தியானம் செய்யலாமா - Osho
கேள்வி : திருமணம் செய்துகொண்டவர்கள் உடலுறவில் ஈடுபடுகிறார்கள்.
பிறகு தியானம் செய்யலாமா....???
இதனால் பலன் குறையுமா..???
ஏன் தியானத்திற்கு பிரம்மச்சரியம் வலியுறுத்தப்படுகிறது...???
பதில் : " தியானத்திற்கு பிரம்மச்சரியம் வலியுறுத்தப்படுவதற்கு முக்கியக்காரணம் பொறுப்புகள் கூடுவதுதான்
மற்றபடி உடலுறவுக்கும் , தியானத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை
உடலுறவு என்பது ஆபாசம் என்பதை விட்டு ஒழியுங்கள்
மேலும் உடலுறவில் சக்தி இழப்பு என்று எதுவும் இல்லை
உங்கள் 2 - லிருந்து 3 - மில்லி அளவு விந்தில் புரதம், மாவுப்பொருள் என்பது மிக மிகச் சிறிய அளவிலேயே இருக்கின்றன
ஆனால் பெண்களைப் பற்றியும் உடலுறவைப் பற்றியும் நினைத்துக்கொண்டே இருப்பதால் ஏற்படும் எண்ணங்களில் இழக்கப்படும் சக்தி அதிகம்
பார்க்கப் போனால், உடலுறவுக்குப் பிறகு தியானம் மிக இயல்பாக வரும்
உடலுறவு முடிந்த பிறகு உங்கள் மனம் பிரம்மச்சரியத்தில் சஞ்சரிக்கிறது
நம்முடைய மதவாதிகள் வாழ்க்கைக்கு எதுஎது தேவையோ
அவற்றையெல்லாம் அடக்கி வைக்கவே முயற்ச்சித்திருக்கிறார்கள்
உதாரணமாக
உடலுறவு, மகிழ்ச்சி, சிரிப்பு இவையெல்லாம் மதத்திற்கு விரோதமான செயல்களாம்
எங்கேயாவது ஒரு சிரித்த பாதிரியாரைப் பார்த்திருக்கிறீர்களா...???
அதைப் போல மகிழ்ச்சியோடு உள்ள ஒரு சந்நியாசியைப் பார்த்திருக்கிறீர்களா...???
ஐயோ பாவம்
அவர்களது மூஞ்சியில்தான் எவ்வளவு இறுக்கம்....!?!"
🌷ஓஷோ🌷
Comments
Post a Comment