புனிதனுக்கும் பாவிக்கும் உள்ள வேறுபாடு - Osho
புனிதனுக்கும் பாவிக்கும் உள்ள வேறுபாடு பாவம் புண்ணியம் சம்பந்தப்பட்டதல்ல, அது புரிதல் சம்பந்தப்பட்ட து.
புரிதல் கொதிக்கச் செய்கிறது. ஒரு சரியான கணத்தில் கொதிப்பு உச்சகட்டத்தை அடையும் போது ஈகோ உதிர்கிறது.
உன்னை யாராவது அவமானப் படுத்தினால் கோபம் வருகிறது. சந்தர்ப்பத்தை தவற விடாதே. ஏன் இந்த கோபம் வருகிறது என்று புரிந்து கொள்ள முயற்சி செய்.
அதை தத்துவமாக ஆக்க முயற்சி செய்யாதே. நூலகத்திற்கு சென்று கோபம் பற்றி ஆராய்ச்சி செய்யாதே.
கோபம் உனக்குள் நிகழ்வது ஒரு உயிர்ப்பான அனுபவம். நீ அதை தொட முடியும், அதை ருசிக்க முடியும், நீ அதில் எரிந்து போகவும் முடியும்.
கோபம் எங்கிருந்து வந்தது, இதன் வேர் எது, எப்படி செயல்படுகிறது, எப்படி என் மீது ஆளுமை செலுத்துகிறது, நான் ஏன் இதில் பைத்தியம் போல் ஆகிவிடுகிறேன்.
புரிந்து கொள்ளும் அம்சம் சேர்ந்தவுடன் கோபத்தின் தரம் மாறிவிடுகிறது. முழுமையாக புரிந்து கொண்டால் பின் கோபம் காணாமல் போய்விடும்.
புரிதல் கொதிக்கச் செய்வது போன்றது. குறிப்பிட்ட டிகிரிக்கும் பின் தண்ணீர் ஆவியாகி விடுகிறது.
பாலுணர்வு உட்பட உன் எல்லா மன ஆற்றல்களும் ஆழ்ந்த புரிதலுக்குப் பின் ஆவியாகிறது.
பாலுணர்வு மறைந்து அன்பு வேரூன்றுகிறது, கோபம் மறைந்து கருணை வேரூன்றுகிறது, பேராசை மறைந்து பகிர்ந்து கொள்ளல் வேர் கொள்கிறது.
ஓஷோ
Comments
Post a Comment