மதங்கள் மக்களிடம் பிரிவை உண்டாக்குகின்றன.- Osho
#மதங்கள்...
மதங்கள் மக்களிடம் பிரிவை உண்டாக்குகின்றன. மனித மனதில் இரட்டைத் தன்மையை உருவாக்குகின்றன. உங்களை சுரண்டுவதற்கு அது தான் மதத் தலைவர்களின் வழி, நீங்கள் துண்டுதுண்டாக வெட்டப்பட்டுக் கிடப்பது தான் அவர்களின் பலம். அதனால் தான் நீங்கள் ஒரு கிறிஸ்தவர், ஒரு முகமதியர், ஒரு இந்து என்று வாழ்கின்றீர்கள். நீங்கள் பிறந்ததில் இருந்தது போலவே இயல்பாக விடப்பட்டு இருந்தால் அதன் பிறகு நீங்கள் சுதந்திரமாக, ஒற்றுமையாக, இயற்கையான குனங்களோடு வாழ்ந்திருக்க முடியும். அப்போது உங்களை அவர்களால் அடிமைப்படுத்த முடியாது. சிந்தித்துப் பாருங்கள் உங்கள் மதங்கள் உங்களை அடிமைப்படுத்துவதைத் தவிர வேறு எதையும் செய்வதில்லை.
-ஓசோ
(புரிதல் பற்றிய புத்தகம்)
Comments
Post a Comment