Google

ஞானிகளும் ஒரு வகையில் பைத்தியம்தான் - Osho




#கேள்வி : - ஓஷோ , ஞானிகளும் ஒரு வகையில் பைத்தியம்தான் என்று கூறுகிறீர்கள் . இதைச் சற்று விளக்க முடியுமா ?

‪#‎பதில்‬ : - " ஆம் . இது உண்மைதான் . ஏனெனில் இருவரும் சாதாரண மனநிலையில் , சாதாரண மக்களைப் போல பெரும்பாலும் இருப்பது இல்லை . ஞானி என்பவன் சாதாரண மனதைக் கடந்து மேலே சென்றவன் . பைத்தியம் என்பவன் மனதிற்குக் கீழே சென்றவன் . இதுதான் ஒரே வித்தியாசம் . ஆனால் இதன் பின்விளைவுதான் அசாதாரணமானது .

ஞானி மனதைக் கடந்து மேலே சென்று பேரானந்த நிலையில் இருக்கிறான் . பைத்தியம் மனதிற்குக் கீழே சென்று ஒருசில எண்ணச் சுழலிலேயே சிக்கித் தவிக்கறான் . மேலே சென்றவன் , எண்ணங்களை ஒதுக்கிச் சென்றிருக்கிறான் . கீழே சென்றவன் மன இறுக்கம் , கவலை , எதிர்பாராத பெருத்த ஏமாற்றம் எல்லாம் சேர்ந்து அவனுடைய மனநிலையைப் பாதித்து அவனை கீழே கொண்டு சென்றுவிட்டது .

ஆனால் இருவரது கண்களையும் பாருங்கள் . அவை ஒன்றுபோலவே ஒருவித வெறுமையில் இருக்கும் . இருவரும் இந்த உலகத்தைப் பற்றி கவலைப்படாமல் எங்கேயோ சஞ்சரித்துக்கொண்டு இருப்பார்கள் . இருவரும் பலசமயம் தங்களுக்குத் தாங்களே பேசிக்கொள்வார்கள் ; தானே சிரிப்பார்கள் ! இதனால் கீழை நாட்டில் , அநேக பைத்தியங்களை ஞானிகள் என்று கருதி மக்கள் வழிபடுகிறார்கள் ! இது கிராமத்தில் சகஜம் .

ஆனால் மேலைநாட்டில் ஒரு ஞானியைக்கூட பைத்தியக்காரன் என்றுதான் எண்ணுவார்கள் . ஜீசஸ் , சாக்ரடீஸ் போன்றவர்களைப் பலர் பைத்தியக்காரன் என்றே கருதிவருகிறார்கள் . பொதுவாக பைத்தியம் ஒரு மிருகம்போல செயல்படும் . மனம் அவன்வசம் ஒருக்காலும் இருக்காது . ஆனால் ஞானியிடம் மனம் ஒரு வேலைக்காரன்போல செயல்படும் . அதைப் பார்த்துத்தான் அவன் சற்று சிரிப்பான் . இவன் வானத்தில் பறப்பவன் . ஆனால் பைத்தியம் பூமிக்கு அடியில் சென்றவன் .

ஞானி விழிப்புணர்வில் முழுமையாக இருப்பவன் . பைத்தியக்காரன் விழிப்புணர்வின் அதல பாதாளத்தில் இருப்பவன் . ஆனால் வெளிப்பார்வைக்கு இருவருமே ஒன்றுபோலவே காணப்படுவார்கள் . இருவரும் ஆடை மற்றும் உணவு விஷயங்களில் அக்கறை காட்டமாட்டார்கள் . ஏதோ கிடைத்ததை உண்டு வழியில் எங்கேயாவது தன்னை மறந்து கிடப்பார்கள் .

ஒருவன் ஞானி என்று எப்படி அடையாளம் காண்பது ? அதற்கு உங்கள் உள்ளுணர்வையும் , பகுத்தறிவையும் மேன்மைப்படுத்த வேண்டும் . அப்பொழுது அது உங்களுக்குச் சரியாகச் சுட்டிக்காட்டும் . வேறு வழியில்லை . " ...........

Comments