Google

இறக்கும் தருவாயில் சுய நினைவுடன் இருந்தால், - Osho



ஒரு மனிதன் இறக்கும் தருவாயில் சுய நினைவுடன் இருந்தால், அவனுக்கு இறந்ததே தெரியாது.

அவன் உடலை சுமந்து செல்லும்போதும் தெரியாது

அவன் உடலை மயானத்தில் வைக்கும்போதுதான் இறந்துவிட்டதை உணர்வான்.

ஏனென்றால் இறப்பில் எதுவும் நிகழ்வதில்லை

நம் மனதிற்கும், உடலுக்குமிடையே ஒரு இடைவெளி உண்டாகிறது.

இந்த இடைவெளியை இதற்குமுன் நாம் உணர்ந்ததில்லை.
.
இந்த அனுபவத்தை வார்த்தைகளால் விளக்க முடியாது.

அவன் ஏதோ பிரிந்ததை உணர்வான்.

 அவனருகில் உள்ளவர்கள் அழும்போதும், உடலில் விழுந்து கதறும்போதும் அவன் இறப்பை உணர்வான்.

துக்கத்துடனே அவன் உடல் மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.

ஏன் உடல் சீக்கிரமே எடுத்துசென்று எரியூட்டபடுகிறது?

அந்த ஆன்மா இறந்துவிட்டதை உணர்வதற்காகவே அவ்வாறு செய்யப்படுகிறது.

அந்த மனிதன் உணர்வுடன் இருந்தால்தான் அது தெரியும்.

உணர்வில்லாமல் இருந்தால் அது தெரியாது.

எனவே  உடல் எரியும்போது அவசரப்பட்டு ஓடிவிடாமல் நிதானமாக பார்க்க வேண்டும்.

உடல் எடுத்து வரும்போதும் எரியூட்டும்போதும் கவனமாக பார்க்க வேண்டும்.

ஏனென்றால் இந்த உடலுக்குள் இனி புக முடியாது.

நம் உடலை எரிப்பதை பார்த்தபிறகு நம் தொடர்பு அருந்துவிட்டதை உணரவேண்டும்.

ஆயிரத்தில் தொன்னூற்று ஒன்பது பேர் மரணத்தை உணராமலே இறக்கின்றனர்.


அதனை கவனமாக பார்த்தால் அடுத்த பிறவியில் சென்ற பிறவி தெரியும்.

இறந்தவுடன் அவன் அடுத்த உலகுக்கு செல்கிறான்.

அதைப்பற்றி நம் யாருக்கும் தெரியாது.

 புதிய உலகம் இப்போது வாழ்ந்த உலகம்போல் இருக்காது.

வேறு உலகம், வேற்று மனிதர்கள் புரியாத மொழி

அவர்களுடைய வாழ்க்கை முறை

அதனால் குழப்பமடைகிறான்.

அது பயமுறுத்துவதாக இருக்கும்

இங்கு எந்த நாட்டிற்கு சென்றாலும் நம்மை போன்ற மனிதர்களை சந்திக்கிறோம்.

இது உணர்வில்லாமல் இறந்தால் தெரியாது

உணர்வுடன் இறந்தால் மிகுந்த சங்கடத்துக்கு ஆளாகிறோம்

இது என்ன வித உலகம் என உணர்கிறோம்

ஆழ்ந்த தியானத்தினால் இந்த அனுபவத்தை அறியமுடியும்.
இல்லையேல் முடியாது.

#ஓஷோ

Comments