Google

கடவுள் - ஓஷோ

#கடவுள்

ஒவ்வொரு சமுதாயமும்,

சமூகமும்,நாகரிகமும்,தனக்கென சொந்தமான கடவுளைக் கண்டுபிடித்துக் கொள்கிறது.

"கடவுள் தனது சொந்த உருவத்தில் மனிதனைப் படைத்தான்,"

என்று அவர்கள் கூறுகின்றனர்.

அது முற்றிலும் தவறானது.

மனிதன்தான் தனது சொந்த உருவத்தில் கடவுளைப் படைத்திருக்கிறான்.

மேலும் இந்த உலகில் அநேக விதமான மக்கள் இருப்பதால்,

கடவுளின் அநேக விதமான உருவங்களும் உள்ளன.

கடவுள் என்பது ஓர் ஆள் அல்ல.

ஆனால் அது ஒருவிதமான இருப்புநிலை மட்டுமேயாகும்.

இந்த உலகத்தை படைத்த ஏதாவது ஒரு கடவுள் இருக்கிறார் என்பதை நான் காணவில்லை.

இந்த இயற்கையில் இறைத்தன்மையின் குணத்தை நான் நிச்சியமாக அனுபவிக்கிறேன்.

ஆனால் அது ஒரு குணத்தன்மை தானே தவிர அது ஓர் ஆள் அல்ல.

இது உனது மனதைக் காயப்படுத்தும்.

ஆனால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது.

 உள்ள உண்மையை உள்ளபடி நான் கூறியாக வேண்டும்.

கடவுள் என்பது ஓர் ஆள் அல்ல,ஆனால் அது ஒரு விதமான இருப்புநிலை மட்டுமேயாகும்.

நான் இருப்புநிலை என்று கூறும்போது மிகவும் கவனமுடன் இரு,

ஏனெனில் நீ உனது கட்டுத்திட்டத்திற்கு ( Mind conditioning)

ஏற்றார் போல கேட்டுக்கொண்டே போகலாம்.

பொருள் போன்ற ஏதோ ஒன்று இருப்பு நிலையில் உள்ளதாக கூட உன்னால் செய்ய முடியும்.

அப்படி செய்தால் நீ மீண்டும் அதே பொறியில் சிக்கிக் கொள்வாய்.

உனது உயிர் உணர்வின் உள் மையத்தில் கடவுள் ஓர் இருப்பு நிலையில் இருக்கிறார்.

அது உனது சொந்த இருப்பு நிலைதான்.அது நீ யாரோ ஒருவரை சந்திப்பது போன்றது அல்ல.

எனவே நான் கடவுள் இல்லை என்று நான் கூறும்போது இதை நினைல் வைத்துக் கொள்.

அதாவது நான் உண்மையிலேயே இந்த இயற்கையானது அதனளவில் போதுமானதாக இருக்கிறது என்றுதான் அர்த்தம் கொள்கிறேன்.

அதற்கு படைத்தவன் தேவையில்லை.படைப்பு இருக்கிறது

ஆனால் படைத்தவன் இல்லை.

படைப்பிற்கும் படைத்தவனுக்கும் இடையே உள்ள பிரிவினை நீக்கப்பட வேண்டும்.

அதன் பிறகு மட்டுமே தியானத்தின் சிகரங்களுக்கு உன்னால் எழுந்து செல்ல முடியும்.

அப்படி இல்லை எனில் நீ கடந்த காலத்தின் குழந்தைத்தனமான வகைகளில் மாட்டிக் கொண்டு அப்படியே இருப்பாய்.

கோயில்களில் தேவாலயங்களில்,யூத மத கோயிலுக்குள் உருவங்களுக்கு முன்னால் மண்டியிட்டுக் கொண்டு எல்லாவிதமான முட்டாள்தனமான விஷயங்களையும் செய்து கொண்டு இருப்பாய்.

மேலும் அந்த முட்டாள்தனமான விஷயங்கள் ஆயிரக்கணக்கான மற்றவர்களாலும் செய்யப்படுவதால்,

அவை முட்டாள்தனமானவை என்பதை உன்னால் ஒருபோதும் உணர்ந்து கொள்ள முடியாது.

-- ஓஷோ --

Comments