பொறாமை என்பது என்ன? - Osho
அன்புள்ள ஓஷோ,
பொறாமை என்பது என்ன?
அது-ஏன் மிகவும் புண்படுத்துகிறது?
#ஓஷோ பதில்
பொறாமை என்பது மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தலாகும்.
நம்மை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பதற்குத்தான் நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.
நம்மை எப்போதும் மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்படி நாம் நிர்பந்திக்கப்பட்டுள்ளோம்.
யாராவது நல்ல வீட்டை வைத்திருப்பார்கள்.
யாராவது நல்ல உடற்கட்டை உடையவர்களாக இருப்பார்கள்.
யாராவது அதிகப் பணம் வைத்திருப்பார்கள்.
இவர்களோடு எல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கிறோம்.
உன்னைக் கடந்து செல்லும்முன் ஒவ்வொருவருடன் உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருந்தால் உன்னுள் மிகப் பெரிய பொறாமை எழும்.
இதுவரை நம்மை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு கற்றுக் கொடுக்கப்பட்டதன் விளைவுதான் அது.
மற்றபடி நீ மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பதை விட்டுவிட்டால் பொறாமை இல்லாமல் மறைந்து போய்விடும்.
அப்போது நீ, நீதான் என்றும், நீ வேறு யாராகவும் இருக்க முடியாது, இருக்க வேண்டிய தேவையும் இல்லை என்பதையும் அறிந்து கொள்வாய்.
நீ உனது உள்பக்கத்தை அறிவாய்.
அடுத்தவர்களின் வெளிப்பக்கத்தை மட்டும்தான் அறிகிறாய்.
அதுதான் பொறாமையை உருவாக்குகிறது.
அதே போல் அடுத்தவர்களும் உனது வெளிப்பக்கத்தை அறிகிறார்கள்.
தங்களின் உள்பக்கத்தையும் அறிகிறார்கள்.
அது அவர்களைப் பொறாமை கொள்ளச் செய்கிறது.
பிறரோடு ஒப்பிட்டுப் பார்ப்பது என்பது முட்டாள்தனமான செயல்.
ஏனெனில் ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள்.
ஒப்பிட முடியாதவர்கள்.
இந்த அறிவு உன்னுள் தங்கினால் பொறாமை மறைந்து போகும்.
கடவுள் எப்போதும் அசல்களையே உருவாக்குகிறார்.
அவர் எப்போதும் நகல்களை நம்புவதில்லை.
#ஓஷோ--
Comments
Post a Comment