Google

புத்தர் தன் கடைசி நேரத்தில் கூறினார் - Osho



🌺 புத்தர் தன் கடைசி நேரத்தில் கூறினார்

என் உடலை இயற்கைக்கு மீண்டும்
ஒப்படைக்கப் போகிறேன்

நான் அனேக உடல்களைப் பயன் படுத்தி உள்ளேன்

ஆனால் இதற்கு முன்பு

இயற்கைக்கு நன்றி சொல்லியது இல்லை

இதுதான் கடைசி இனி நான் உடலுக்குள் புக மாட்டேன்

இதுதான் நான் வாழ்கின்ற கடைசி வீடு கடைசி இருப்பிடம்

நான் என் உடலைத் திருப்பித் தர வேண்டும்

இது அனேக வேலைகளைச் செய்து விட்டது

இது என்னை ஞானத் திற்கு இட்டுச் சென்றது

இது நல்ல சாதனமாக இருந்தது இது எல்லா

வகையிலும் எனக்கு  உதவியாக இருந்தது

ஆகவே இயற்கைக்கு நன்றி சொல்லி விட்டு

இந்த வீட்டை திருப்பி கொடுக்க வேண்டும்

ஏனெனில்

இந்த உடல் இயற்கை எனக்கு கொடுத்த வெகுமதி

நான் முழு உணர்வுடன் இதைக் கொடுக்க வேண்டும்

அதன் பிறகு அவர் தன் உடலை ஒப்படைத்தார்

அவர் உடலைச் சுற்றி ஒரு ஒளி இருந்தது

அவர் உடல் சக்தியாக மாறி

இந்தப் பிரபஞ்ச த்துடன் கலந்து விட்டது

அவருடைய மரணம் உள்ளுணர்வுடன் கூடிய மரணம்

பிறகு அவர் தனது மனதை ஒப்படைத்தார்

அப்பொழுது நறுமணம் பரவியது

புத்தரின் மனம் ஒரு நறுமணம் தான்

கள்ளங் கபடமற்ற தூய்மையான வாழ்க் கையின் நறுமணம்

பிறகு அவர் தன் ஆன்மாவை ஒப்படைத்தார்

இந்த மூன்று விஷயங்களும் ஒப்படைக்கப் பட்ட பின்னரே

அவர் இறந்தார்

இதுதான் மகா பரி நிர்வாணம்

இதுதான் மகாசமாதி 🌺

🌷 ஓஷோ
ஞானத்திற்கு ஏழு படிகள் 🌷

Comments