Google

ஆயிரம் வெற்று வார்த்தைகளை விட சாந்தி தரும் ஒரு வார்த்தை மேல் " - Osho



🌷 புத்தர் கூறுகிறார்

"
உங்கள் சாத்திரங்கள் முழுக்க வெறும் வார்த்தைகள் தான்

வார்த்தைகள் கொள்கைகள் சிந்தனை முறைகள்

உங்கள் மனதைப் பிடித்து ஆட்டி வைக்கின்றன.

மனித மனம் ஞானத்தை விட அறிவில் நாட்டம் அதிகம் கொண்டு இருக்கிறது.

கடவுள் அழகு சத்தியம் இவற்றை அனுபவிக்காமல் தெரிந்து கொள்வதில் அதிகம் நாட்டம் கொண்டு உள்ளன.

அன்பு உனக்குள்ளேயே இருப்பது.

எதற்கு அதைப் பற்றி தெரிந்து கொள்வது.

அதை பெருக்கெடுத்து ஓட விடு.

மனிதன் வார்த்தைகளைப் பிடித்து தொங்கிக் கொண்டே இருக்கிறான்

அவைகள் உள்ளீடற்ற எந்தப் பொருளும் இல்லாத வார்த்தைகள்

ஆனால் படிப்பு அறியாமையை நீக்குவதில்லை

ஒளியைப் பற்றி தெரிந்து இருந்தாலே
இருட்டு விலகி விடாது

இருட்டை விரட்டி அடிக்க ஒரு சின்ன மெழுகு வர்த்தியே போதும்

உங்களுடைய மனதை நிறைத்து வைத்திருப்பவை வெறும் வெற்று வார்த்தைகள் தான்

வார்த்தையை மட்டும் வைத்துக் கொண்டு கடவுளை எனக்குத் தெரியும் என்று நினைப்பதில் அர்த்தம் இல்லை.

கடவுளை புரிந்து கொண்டு கடவுள் என்ற வார்த்தையை சொல்லும்போது பிரகாசமான ஒளி நிறைந்து இருக்கும்

நீங்கள் வெற்று வார்த்தைகளில் இருந்து விடுபடும் வரை உங்கள் தேடுதலால் பயனில்லை.

எந்த வார்த்தை பிரகாசமானது எது சாந்தி தரும் வார்த்தை.

அது எப்போதும் வெளியே இருந்து வருவதல்ல.

நீ ஆழமாக உள்ளே போகும் போதுதான் அதைக் கேட்க முடியும்

நீ தியானத்தில் இருக்கும்போது தான் அதைக் கேட்க முடியும்.

நீ ஆழ்ந்த மௌனத்தில் இருக்கும் போதுதான் அதைக் கேட்க முடியும்

நீ ஏகாந்தத்தில் இருக்கும் போதுதான் அதைக் கேட்க முடியும் 🌷

🌹 ஓஷோ
தம்ம பதம் III 🌹

Comments