Google

இந்தப் பிரபஞ்சம் முழுக்க நிறைய இடம் இருக்கிறது ...-Osho



இந்தப் பிரபஞ்சம் முழுக்க நிறைய
இடம் இருக்கிறது ...

ஆனால் அணுக்கள்தான் குறைவாக
இருக்கின்றன ...

இரண்டு அணுக்களுக்கு இடையே அந்த அணுக்களை
விட மிகப் பெரிய இடைவெளி இருக்கிறது ...

அணுவுக்குள் நுழைந்தால் அங்கேயும்
எலெக்ட்ரான்களுக்கு இடையே
இடைவெளி இருக்கிறது ...

இறுதியில் பொருண்மை முழுக்க மறைந்து
விடுகிறது ...

எஞ்சியிருப்பது வெறும் சுத்தவெளிதான்
வெட்டவெளிதான் ...

இந்த உண்மையை மேலை
நாட்டு விஞ்ஞானிகள் கண்டு பிடித்தனர் ...

ஆனால் நமது நாட்டில் பொருட்களைப்
பற்றி கவலைப்பட வில்லை ...

நமது நாட்டு ஞானிகள் ஆன்மாவைத்
தேடினார்கள் ...

ஆன்மாவை உடலில் இருந்து மனதுக்குள்
தேடினார்கள் ...

மனதிலிருந்து ஜீவனுக்குள்
தேடினார்கள் ...

ஒரு கணத்தில் எல்லாமும் மறைந்து
விட்டன ...

இறுதியில் ஏதும் அற்றதுதான்
இருந்தது ...

உனக்குள் ஏதும் இல்லை வெறும்
ஏதுமற்ற ஒரு பிரமாண்டம்தான் இருக்கிறது ...

ஜடம் என்று நினைத்தது
எல்லாம் ஜீவன் என்பது தெரிய வருகிறது ...

வடிவெடுத்தது பொருளாகிறது
வடிவெடுக்காதது வெளியாகிறது ...

வடிவம் எடுப்பது தான் என்ற அகந்தை
ஆகிறது ...

வடிவம் எடுக்காதது ஏதுமற்றது
ஆகிறது ...

பொருட்களின் ஆழத்துக்கு செல்லும்போது
பொருள் இல்லாது போய் விடுகிறது ...

எண்ணங்களின் ஆழத்துக்கு செல்லும்போது
அகந்தை மறைந்து விடுகிறது ...

அப்போது நீ ஏதுமற்ற நிலையை
அடைகிறாய் ...

ஓஷோ ...
தாவோ மூன்று நிதியங்கள்
பாகம் 2

Comments