இந்தப் பிரபஞ்சம் தன்னுணர்வாய் தன்னறிவாய் உள்ள ஒரு மாபெரும் சக்தியால் இயக்கப் படுகிறது -Osho
💓 இந்தப் பிரபஞ்சம் தன்னுணர்வாய்
தன்னறிவாய் உள்ள ஒரு மாபெரும்
சக்தியால் இயக்கப் படுகிறது
அந்த சக்தியே பொருளாகவும் ஆகி
அதன் இயக்கமாகவும் ஆகி
அதுவே அதனுள்ளும் உள்ளது
நமக்கு அன்பு கருணை
மகிழ்ச்சியான வாழ்க்கையை போதிக்கின்ற மதத் தன்மை தான் வேண்டும்
கடவுளை அடைய ஒரே வழி
மனதைரியமும்
சுயசிந்தனையும்தான்
முடிவில் சரணாகதி
உங்கள் ஆசைகள் அகங்காரத்தை விட்டு விடுவதுதான் சரணாகதி
இதற்கு ஒரே வழி தியானம்தான்
உங்களுடைய எண்ணங்கள் குறையக் குறைய
உங்களுக்கு ஞானத் தன்மை கூடும்
இதை நீங்கள் அனுபவத்தில்தான்
புரிந்து கொள்ள வேண்டும்
உங்களுடைய எண்ணங்களின் ஓட்டத்தை வெறுமனே பாருங்கள்
இதுதான் தியானத்திற்கான ஒரே வழி
கடவுள் என்பது ஒரு இயக்கமாகும்
(process)
அது உயிரற்ற பொருள்களில்
(inanimate objects)
உறக்கமாக இருக்கிறது
அதுவே உயிர்ப் பொருள்களில்
(animate objects)
உயிராக பிரக்ஞையாக உணர்வாக
சக்தியாக இருக்கிறது
கடவுள் உங்களுக்குள்ளே உங்களோடு மிக
நெருக்கமாக இருக்கிறார்
ஹெய்சென் பெர்க் என்ற ஜெர்மன் விஞ்ஞானி
நிலையாமை தத்துவத்தை வெளியிட்டார்
அவர் கூறுகிறார் ...
அணுவில் உள்ள மூலக் கூறுகள்
ஒரு சமயம் பொருளாகவும்
மறு சமயம் அலையாகவும்
இன்னொரு சமயம் பொருளாகவும்
அலையாகவும்
மறு சமயம் எதுவும் இல்லாமலும்
இருக்கிறது
இது போலத்தான் கடவுளும்
நிலையற்ற தன்மையில் இருக்கிறார்
மதங்கள் பொருள்களை
வலியுறுத்துகின்றன
யோகிகளும் ஞானிகளும்
அலையை வற்புறுத்துகின்றனர்
புத்தர் ஒன்றுமற்ற தன்மையை
வெறுமையை வற்புறுத்துகிறார்
ஒரு நாத்திகன் அலையையும் பொருளையும் பார்த்துப் புரியாமல் தவிக்கிறான்
எண்ணங்கள் காலியான மனம்தான் கடவுளின் இருப்பிடம்
இதனை தியானம் மூலம்தான்
அடைய முடியும் 💓
💟 ஓஷோ 💟
Comments
Post a Comment