மக்கள் எந்த வேலையும் இல்லாமல் வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் - புத்தர்
🌹 புத்தர் கூறுகிறார்
மக்கள் ஒரே பரபரத்துக் கொண்டு
இருக்கிறார்கள்
எங்கே போகிறோம் என்று தெரியாமல் வேக வேகமாகப்
போய்க் கொண்டு இருக்கிறார்கள்
மக்கள் எந்த வேலையும் இல்லாமல் வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள்
" சிலரே நதியைக் கடக்கிறார்கள்
பெரும்பாலோர் இக்கரையில் சிக்கி தவிக்கிறார்கள் "
அவர்களுக்கு இக்கரை மட்டுமே
தெரிகிறது
அக்கரை தெரிவதே இல்லை
இக்கரை பருப் பொருளால் ஆனது
அக்கரை ஆன்மிகச் சார்புடையது
அதைப் பார்க்க முடியாது
அக்கரை என்றால்
சிரஞ்சீவித்துவம், காலம் கடந்தமை, நித்தியம், கடவுள், நிர்வாணா என்று பொருள்
அதை பிறருக்கு காண்பிக்கவும் முடியாது நிரூபிக்கவும் முடியாது
மறு கரைக்கு வந்து சேர அவர்களை
அழைக்கத்தான் முடியும்
மறு கரைக்கு அவர்களாகவே வந்து பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்
இதைத்தான் புத்தர்
" இஹி பாஸிகோ என்பார் "
நீயே வந்து பார்த்துக் கொள் என்பதாகும்
மனிதனுடைய முழு முயற்சியும்
மரணத்தால் அழிக்க முடியாதது
எது என்பதைத் தெரிந்து கொள்வதுதான்
பிறப்பு ஏற்கனவே நடந்து விட்டது
அதைப் பற்றி இப்போது எதுவும் செய்ய முடியாது
ஆனால்
இறப்பு நடக்க வேண்டி இருக்கிறது
அதைப் பற்றி ஏதாவது செய்ய முடியும்
நீங்கள் உணர்வோடு இறக்க முடியும் என்றால்
மீண்டும் உணர்வேடு பிறக்கலாம்
நீங்கள் உணர்வோடு பிறந்த பிறவிதான்
உங்கள் அசலான வாழ்வு
பல பிறவிகள் எடுத்து வாழ்ந்திருந்தாலும்
உங்கள் உணர்வோடு பிறந்த பிறவி தான் கணக்குக்கு வரும்
நீங்கள் உணர்வோடு பிறக்க வேண்டும் என்றால்
உணர்வோடு இறக்க கற்றுக் கொள்ளுங்கள் 🌹
🌺 ஓஷோ
தம்ம பதம் III
புத்தராக இரு 🌺
Comments
Post a Comment