Google

சந்தோஷமாகக் கஷ்டப்படு - Osho




சந்தோஷமாகக் கஷ்டப்படு என்று நான் கூறுவது
உனக்கு முரண்பாடாகத் தெரியலாம் ...

ஆனால் உண்மை அதுவல்ல ...
அவை முரண் பட்டவை போல் தெரிகின்றன ...

நீ கஷ்டத்தை சந்தோஷமாக அனுபவிக்க
முடியும் ...

அந்த ரகசியம் இதுதான் ..நீ அதிலிருந்து
தப்பிச் செல்ல எண்ணாமல் ...

கஷ்டம் உன்னிடம் இருப்பதற்கு
அனுமதிப்பாயே யானால் ...

நீ அதை சந்திப்பதற்கு தயாராய்
இருப்பாயே யானால் ...

அதை எப்படியாவது மறந்துவிட வேண்டும்
என்று முயற்சி செய்யாமல் இருந்தால் ...

அப்போது கஷ்டம் இருக்கும் ஆனால் அது
உனக்கு வெளியே இருக்கும் ...

உனது மேற்பரப்பில் இருக்கும்
ஆனால் உனது மையத்தில் இருக்காது ...

உனக்கு கஷ்டம் இல்லாமல் வேறு யாருக்கோ
நடப்பது போன்று நீ உணர்வாய் ...

நீ எப்போது உன்னுடைய கஷ்டத்தை
கவனிக்க ஆரம்பிக்கிறாயோ ...

அப்போது கஷ்டம் உன்னுடையதாக
இல்லை ...

மாறாக நீ சந்தோஷப்பட ஆரம்பிக்கிறாய்
கஷ்டத்தின் மூலம் அதன் எதிர் ...

துருவமான சந்தோஷத்தினை
நீ அறிகிறாய் ...

ஆகவே உன்னை அனுபவி
நீ கஷ்டத்தை கவனித்த உடனே ...

உனது மையத்தை நோக்கி திரும்பி
செல்கிறாய் ...

உடனே உன்னிடம் துன்பத்திற்கு
பதில் சந்தோஷம் இருப்பதை உணர்வாய் ...

ஆகவே நான் சந்தோஷமாக அனுபவி
என்று கூறுவதன் பொருள் ....

கவனி என்பதேயாகும் ...

நான் அனுபவி என்று கூறுவதன் பொருள்
அங்கிருந்து தப்பி ஓடாதே என்பதாகும் ...

ஓஷோ ...
கவனி ...தப்பி ஓடாதே ...
ஞானத்தின் பிறப்பிடம் ...

Comments