What is தாவோ? - OSHO
What is தாவோ?
ஓஷோவின்
எளிய விளக்கம்,,,
வணக்கத்திற்குரிய ஆச்சாரியன்
சொல்கிறான்:
மேன்மையான தாவோ உருவமற்றது.
எனினும் இந்த பூமியையும் சொர்க்கத்தையும் அதுதான் அளித்துக் காக்கிறது.
மேன்மையான தாவோ ஆசையற்றது.
எனினும் அதன் சக்தியால் தான் சூரியனும் நிலவும் அதனதன் பாதையிலிருந்து தவறாமல் சுழன்று கொண்டிருக்கின்றன.
மேன்மையான தாவோ பெயரற்றது.
எனினும் அதுதான் அனைத்தையும் தாங்கி நிற்கிறது.
எனக்கு அதன் பெயர் தெரியாது.
என்றாலும் இப்போது நாம பேச்சுக்காக நாம் அதனை தாவோ என்று அழைப்போம்.
இயற்கையின் தன்மை குறித்த உன்னதமான நுண்ணறிவுதான் தாவோ. இது காலம் கடந்து நிற்கும் தன்மை.
இதை நான் நுண்ணறிவு என்று சொல்கிறேன். அதாவது உள்நோக்கு, இயற்கை அறிவு சார்ந்தது இல்லை.
இருப்பு நிலை சார்ந்தது.
இது தான் தாவோவின் உள்நோக்கு.
தாவோ என்பது கடவுளின் இன்னொரு பெயர் அவ்வளவுதான்.
ஓஷோ,,,,
Osho_Tamil
Comments
Post a Comment