Google

ஜென்னும் ஓஷோவும்,,,




ஜென்னும்
ஓஷோவும்,,,

பூச்சாண்டி பொம்மை
நெல் வயலில்
எத்தனை விழிப்புணர்வற்று
எத்தனை உபயோகமாய்,,,,,

பூச்சாண்டி பொம்மை நிஜமல்ல. ஆனால் உபயோகமானது.

எனவே ஒரு விஷயம் உபயோகமானதாக இருந்தால் அது உண்மை உள்ளதாக இருப்பதில்லை.

அதே போல் உண்மையாக இருப்பதல்லாம் உபயோகமாகவும் இருப்பதில்லை.

ஞான நிலை ( Enlightenment) அடைவதால் என்ன பயன்? உன்னால் அதை விற்க முடியாது.

ஞான நிலை அடைவதால் என்ன பயன்?

பயன்படுவது என்பது வாழ்க்கையின் லட்சியமல்ல

வாழ்க்கையின் லட்சியம் என்பது எல்லா முயற்சிகளிலிருந்தும் விடுபட்டு, உள்ளார்ந்த மையத்தை நோக்கி தளர்வது தான்.

அதுவே நாட்டியமாடும் மரங்களுடன் கலந்து விடும் ஒரு ஆன்ம நடனம்.

நட்சத்திர நாட்டியத்தோடு கலந்துவிடும் லயித்து விடும் ஒரு பிரபஞ்ச பரவசம்.

அங்கே எந்த கவலையுமில்லை. மனம் என்று எதுவுமே இல்லை. இரண்டற கலந்து விடும் ஆனந்த நிலை,,,,

ஓஷோ,,,                      
OSHO

Comments