Google

நான் தூங்குவது இல்லை - Buddha



நான் தூங்குவது இல்லை.
-----------------------------------

ஒரு முறை ஆனந்தர் புத்தரிடம் " நீங்கள் தூங்குவதை பல ஆண்டுகளாக கவனித்து இருக்கிறேன். தூங்கும் போது முழித்து கொண்டிருப்பதை போலவே இருக்கும். நீங்கள் உண்மையில் தூங்கிறீர்களா என்பது மிகபெரிய சந்தேகம். இரவு முழுவதும் சிறிதும் அசையாது ஒரே நிலையில் இருக்கிறீர்கள். தூங்கும் போது அது எப்படி உங்களால் சாத்தியமாகிறது..?"

ஆம், புத்தர் இரவு தூங்க செல்லும் போது கைகளை கால்களை எப்படி வைத்து கொண்டு படுக்க சென்றாரோ அதே நிலையில் சிறிதும் அசையாது காலையில் கண்விழிப்பார். அதை கவனித்த ஆனந்தருக்கு சந்தேகம் வந்தில் ஆச்சரியம் இல்லை. அந்த சந்தேகத்தை தீர்த்து கொள்ள முயன்றார்.

புத்தர் மெதுவாக ஆனந்தரிடம், "ஆனந்தா.. நீ தியானத்தை சரியாக கடைப்பிடித்தால் இந்த கேள்வியே உன்னிடம் இருந்து எழுந்து இருக்காது. தியானத்தை பகலில் இடைவிடாது கவனித்து வந்திருந்தால், இரவிலும் உன்னால் கவனிக்காமலே இருக்க முடியாது. அதை சரியாக கடைப்பிடித்தால் மனம் விழிப்பில் மட்டுமே கவனம் கொள்ளும். அதனால் கனவுளை உள்வாங்கி கொள்ள முடியாது. கனவுகள் இல்லாத மனம் தூய்மையானது, களங்கமில்லாதது. அந்த சமயத்தில் என் உடலே தூங்குகிறது. நான் தூங்குவது இல்லை. அதனால் விழிப்புணர்வுடனே தூங்குகிறேன். எனக்குள் இருக்கும் அந்த சுடரொளி இருந்து கொண்டே இருக்கும். இது தூக்கதில் மட்டுமல்ல ஆனந்தா.., நான் இறக்கும் போதும் விழிப்புணர்வுடனே இறப்பேன்..!" என்றார் பெருமான்.

Buddha_Tamil

Comments