தாங்கள் ஞானத்தைப்பற்றி என்ன கூறுகிறீர்கள்?? - OSHO
குருவே ஞானத்தைப் பற்றிய கருத்துக்கள் பலஞானிகள் பலவிதமாக அந்தந்த காலத்திற்கேற்ப கூறிச்செல்கிறர்களே − அக் கருத்துக்கள் உண்மையா? தாங்கள் ஞானத்தைப்பற்றி என்ன கூறுகிறீர்கள்??!!
குரு: முதலில் உனது கேள்வியே தவறு. ஞானத்தைப் பற்றி எந்த ஞானிகளும் கருத்துக்கள் கூறமுடியாது. அனுபவங்களை மட்டுமே கூறமுடியும். அனுபவங்கள் கருத்துக்களுக்கு அப்பாற்ப்பட்டது. ஞானியின் அனுபவங்களை, கருத்துக்களாக்கப்படும்போது ஞானத்தின் அனைத்து தன்மையும் இழந்துவிடுகிறது. இருப்பினும், இவைகள் தத்துவங்களாக்கப்படுகிறது. தத்துவங்கள் அனைத்தும் மனிதனுக்கு ஆறுதலைத் தரலாமே தவிர தீர்வை ஒருபோதும் தந்ததில்லை. தத்துவங்கள் அனைத்தும் ஜீவனில்லாமல் கிடக்கும் சவத்தின் சாரத்தை வார்த்தைகளாக்கப்பட்டவை. ஞானிகளின் ஞானம் அந்ததந்த காலத்தில் நிகழும் நிகழ்வுகளுக்கேற்ப தங்களது அனுபவகளை பதிவு செய்கிறார்கள். இருப்பினும் அது அவர்களுடையதே தவிர ஞானத்தினுடையதல்ல. ஞானத்தைப்பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அது அதுவாகவே இருக்கிறது. நீ அது அதுவான பிறகு அதை எப்படி மொழிபெயர்க்க முடியும். ஞானிகள் அந்த அதுவை தாங்கள் அனுபவப்பட்டதை, அதாவது அனுபவத்தை மொழி பெயரக்கிறார்களே தவிர ஞானத்தை அல்ல. "யார் ஒருவன் உன்னைப்பற்றி விமர்ச்சிக்கறானோ அது நீ அல்ல. அது அவனேதான் என்ற சித்தாந்தம் இந்தக் கூற்றில் இருந்து எழுந்ததே."
Osho
Comments
Post a Comment