Google

புத்தருக்கான விதை - OSHO



🌹ஒவ்வொரு துன்பமும் புத்தருக்கான விதை-போதிதருமர்🌹

🌹துன்பத்தைக்கூட நன்றிப்பெருக்குடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று போதிதருமர் கூறும்போது, சரியாகத்தான் கூறுகிறார்.

ஏனெனில் அதுதான் நீங்கள் புத்தர் ஆவதற்கான விதையாகும்.

துன்பம் என்பது அங்கு இல்லை என்றால், நீங்கள் ஒருபோதும் சத்தியத்தை அடைய மாட்டீர்கள்.

துன்பம் தான், அதைக் கடந்து செல்வதற்கு உங்களை தூண்டிக் கொண்டே இருக்கிறது.

துன்பமும் வேதனையும் தான் அந்த துன்பம் மற்றும் வேதனையைக் கடந்து அதற்கு அப்பால் செல்வதற்கான பாதையைத் தேடிக் கண்டுபிடிக்கும்படி உங்களை இறுதியாக கட்டாயப்படுத்துகிறது.

பேரானந்தத்தையும் முடிவில்லா மகிழ்ச்சியையும் அடைகின்ற ஒரு வழியைக் கண்டு கொள்வதற்கு உங்களை கட்டாயப்படுத்துகிறது.

துன்பத்திற்கு எதிராக இருக்காதீர்கள்.

பதிலாக துன்பத்திற்கு நன்றி உணர்வு கொள்ளுங்கள் என்று போதிதருமர் கூறுகிறார்.

இது ஒரு மாபெரும் கருத்து.

வேதனை, துன்பம், வயதான காலம், மரணம் ஆகியவை குறித்து நன்றி உணர்வு கொள்ளுங்கள்.

ஏனெனில் இவை அனைத்தும் மட்டுமே நீங்கள் உண்மையைத் தேடிச் செல்வதற்கான ஒரு சூழ்நிலையை உங்களுக்கு உருவாக்குகிறது.

இல்லையெனில் நீங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கி விடுவீர்கள்.

இல்லையெனில் நீங்கள் மிகவும் சௌகரியமானவராக, ஒரு காய்கறி போன்று ஆகிவிடுவீர்கள்.

அதற்கான அவசியம் இருக்காது.

துன்பம் தான் தேடுதலுக்கான அவசியத்தை உருவாக்குகிறது 🌹

🌹ஓஷோ🌹
Osho_Tamil

Comments