தியானத்தில் மலரும் புதிய உலகம் OSHO
தியானத்தில் மலரும் புதிய உலகம்.
வெளியிலிருந்து திணிக்கப்படுவதல்ல அது.
அது, அங்கேதான், அதற்குள்தான், எப்போதும் இருப்பது. அதற்குள் அதுவாக.!
மற்றவர்கள் அறிகிறார்களோ இல்லையோ, அது அங்கேதான் இருக்கிறது.
ஒரு விதையாய், ஒரு சக்தியாய். அதை நாம் மெய்யாக்கவேண்டும். அவ்வளவுதான்.
அதனால்தான், அது மலரும்போது ஒருவர் பலமாகச் சிரிக்கிறார்.! அது உள்ளேயே இருந்தது;தெரியாமல் போய்விட்டதே என்று!
தியானம், சிற்பம் செதுக்குவது போல ஒரு வடிவத்தை வடிவமைக்கும்போது ஏராளமான, செதுக்கப்பட்ட பொருள் குவிந்து விடுகிறது.
அதே போலத்தான், தியானம் செய்பவர், தன் உள்ளாற்றல்களை உயிர்த்துடிப்புள்ளவையாக, இயக்கமுடையவையாக, பிரக்ஞைப் பூர்வமான படைப்பாக மாற்றி விடுகிறார்.
இங்கே, படைப்பாளியும், படைக்கப்படும் பொருளும், படைப்பு முறையும் வேறு வேறு அல்ல;ஒன்றேதான்.
ஏனென்றால், தியானிப்பவரே எல்லாம். அதனால்தான், தியானத்தை நான் மாபெரும் கலை என்கிறேன்.
--ஓஷோ--
Osho_Tamil
Comments
Post a Comment