Google

"ஞானத்தோடு பேசுகிறேன்"



"காலம்"
#######
"கால வெள்ளோட்டத்தில் எத்தனை எத்தனையோ நிகழ்வுகள் அடித்துச் செல்லப்பட்டுயிருக்கிறது. எத்தனை விதமான மனிதர்கள், எத்தனை விதமான ஆசைகள், எத்தனை விதமான ஏக்கங்கள் தாபங்கள் வன்முறைகள் சூதுகள் கண்டுபிடிப்புகள் படைப்புகள் இன்னும் எத்தனை எத்தனையோ நிகழ்வுகள் அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வந்துவிடுகிறது காலம். ஒன்று நினைவில் இருக்கட்டும் காலம் மனிதனுக்கு மட்டுமே பிரபஞ்சத்திற்கு அல்ல. ஆனால், காலத்தைக் கொண்டே அனைத்தையும் நிர்மாணிக்கப்படுகிறது. இந்தக் காலச் சக்கரத்தை பௌத்துவம் பெருமளவு எடுத்தியம்புகிறது. காலத்திற்கென்று வரைமுறைகளோ எல்லைகளோ கிடையாது. ஆனால்"காலத்தை மையப்படுத்தியே நிகழ்கிறது இப்பிரபஞ்சம்.முறையற்ற தொடர்பற்ற செயலக்குள் செயலற்ற தற் செயலுக்கு அப்பாலான நிலையில் இயங்குவது எது??? இந்நிலை பிரபஞ்சத்திற்கு பொருந்துமா?? இல்லை பிரபஞ்சத்தை தாண்டிய நிலையில் இயக்கம் இயங்குமா??? தற்சுழற்சி என்பது அதன் நேர்ரெதிரான விசைக்கு மூலக்குறியீடா??
இப்படியாயின் கேள்விகள் எழுந்து அமிழ்ந்துக் கொண்டே இருக்கிறது. இதிற் ஞானிகளின் பங்கென்ன??? இவர்கள் காலங்கடத்தியா?? இல்லை இவர்களை காலங்கடத்துமா??? இதற்கு தத்துவார்த்தமான முடிவு சமாதானத்தை தரலாம். ஆனால் உண்மையான முடிவு???? இதற்கான பதிலை நசிகேசனக்கு கூட எமதர்ம ராஜா மொழியவில்லை ஏன்???!!!! தன்னை அறியும் தேடலில் காலச்சக்கரம் சிக்கலான அமைப்பை உருவாக்கும் என்பது ஐயமில்லை. இருப்பினும் காலத்தை கூட ஞானமாக கருதலாம். பிரம்மஞானிகள் காலத்தை கடத்துவதுமில்லை கடத்தியாகவும் இல்லை. ஒருவேளை காலமாகவோ, காலத்திற்கு அப்பாற்ப்பட்ட நிலைக்களத்தில் கலந்தவர்களாகவோ இருக்கலாம். மூன்று காலத்திற்குட்ப்பட்ட நிகழ்வுகளுக்கு நாம் பழக்கப்பட்டு விட்டோம். தற்கால விஞ்ஞானம் காலம் நான்காவது பரிணாமம் படைத்தது என்கிறது. இதுவரை நீ கண்டுவந்ததை நான்காவது பரிணாமத்துக்கு நீ பழக்கப்படும் போது அனைத்தும் பொய்யாகிறது இல்லை தவறாகிறது. ஞானிகள் காலத்தின் நான்காவது பரிணாமத்தை கடக்கும் போது அனைத்தும் மாயை என்று அறிகிறார்கள். இந்நிலையை கடந்து வெட்டவெளியாக ஞானிகள் மாற்றமடையும் போது இவ்வுடலை குறிப்பட்ட நாளில் உகுத்துவிடுகிறார்கள்.
காலத்தைப் பற்றி இன்னும் பேசுவேன்.....

Comments