ஆன்மீக உள்ளுணர்வு - OSHO
❤ ஆன்மீக உள்ளுணர்வு மிக்க மதத் தன்மை வாய்ந்தவர்கள் இதைபோன்ற அற்புத இயற்கை அழகுகளை சேகரித்து,
அந்த சூரிய அஸ்த்தமனத்தோடும் சூரிய உதயத்தோடும்,
மற்றும் இரவில் ஜொலிக்கும் நட்சத்திரங்களோடும்,
ரோஜா, தாமரை போன்ற மலர்களோடும் ஒன்றாகி விடுவார்கள்.
உங்களை சுற்றி இந்த பிரமாண்டமான புதிர்கள் செயல்படுவதைக் கண்டு ஆனந்த பூரிப்பு அடைவார்கள்.
ஒவ்வொன்றும் ஒரு கவிதை.
ஒவ்வொன்றும் ஒரு இசை.
ஒவ்வொன்றும் ஒரு அழகிய நடனம்.
ஆனால், சகல நெறிப்படுத்தப்பட்ட ஒழுங்கு படுத்தப்பட்ட மதங்கள் அனைத்தும் உங்களுடைய ரசனை உணர்வை அழித்து ஒழித்து விட்டன.
உங்களுடைய இயல்பான உள்ளுணர்வை அவைகள் சிதைத்துவிட்டன.
நீங்கள் வெளி உலகத்தை ரசிக்க தெரியாவிட்டால்,
உங்கள் உள் உலகத்தில் உள்ளதை ரசிக்கக் கூடிய தகுதியை இழந்து விடுகிறீர்கள்.
ஏனெனில், உங்கள் உள் உலகம் என்பது மிக ஆழத்தில் இயங்குவது.
உங்களுடைய உங்களுக்கு மிக அருகில் உள்ளது.
என்னுடைய அனுபவத்தை பொறுத்தவரையில்
ஒரு மலரையோ, அல்லது நட்சத்திரங்களையோ ரசிக்கும் போது.....
உங்களிடம் திடிரென்று ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டு நீங்கள் உங்களையே பார்த்து ரசிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.
நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன் என்று நீங்களே கூறிக் கொள்வீர்கள்.
என்னுடைய உள்ளொளி என்ன? என்று நீங்களே அறிவீர்கள்.
ஆகவே, இந்த வெளி உலக அழகு உங்களுடைய உள் அழகையே சுட்டிக் காட்டுகிறது.
வெளி உலக அழகை ரசியுங்கள்.
அந்த உணர்வு நீங்கள் தியானத்தில் ஆழமாக செல்ல மிகவும் உதவி செய்யும்.
அது உங்களை வேறு வகையில் அழைத்து சென்று ஈடுபடுத்தாது.
நீங்கள் எப்பொழுது வெளி உலக உணர்வுகளுக்கு தடை போடுகிறீர்களோ அப்பொழுதே அது உங்களை அது இஷ்ட்டப்படி அழைத்து சென்று மூழ்கடித்துவிடும்.
நீங்கள் ஒரு பெண்ணின் அல்லது ஆணின் அழகை ரசிக்காவிட்டால்,
நீங்கள் கண்களை மூடி தியானத்தில் ஈடுபடும்போது
உங்களை சுற்றி அந்தப் பெண்களும் அல்லது ஆண்களும் தான் இருப்பார்கள்.
இது நீங்கள் ஏற்படுத்திய தடையினால், மற்றும் அடக்குதலினால் ஏற்பட்ட விளைவு.
அப்போது நீங்கள், உங்கள் உள்ளே ஆழமாக செல்லும்போது இவைகள் அனைத்தும் மேலே மிதந்துவிடும்.
ஏனெனில், உங்கள் மனதை திருப்தி படுத்தவில்லை.
ஆகவே உங்கள் உள் தெய்வீக நிலையை அடைவதற்கு நீங்கள் தகுதி படைத்தவராக இல்லை.
நான் உங்களுக்கு போதிப்பது என்னவென்றால்,
நீங்கள் இந்த உலகத்தை நேசியுங்கள்.
இதை துறந்து ஓடாதீர்கள்.
ஏனென்றால், உங்களை அறிய இதைத் தவிர வேறு வழி இல்லை.
நீங்கள் இந்த பிரபஞ்சத்தின் ஒரு பகுதி.
நீங்கள் அதிலிருந்து எப்படி எங்கே தப்பித்து செல்வீர்கள்...???
எல்லாவற்றையும் துறந்து விடுவது என்பது பொய்.
அவைகள் அனைத்தும் உண்மைக்கு மாறானது.
அவைகள் பொய்மையை தான் தூண்டும்.
இந்த அழகு உங்களுடையது
இந்த ஆனந்தம் உங்களுடையது
இந்த தெய்வீக நிலை உங்களுடையது ❤
❤ ஓஷோ
பரவெளியின் பரவசங்களும் பாடல்களும் ❤
Osho_Tamil
Comments
Post a Comment