இருளும் ஒளியும் - ஓஷோ.
இருட்டின் இயல்பைப் பற்றி முதலில் தியானிப்போம்.
இருட்டின் மேல் தியானிக்க ஆரம்பித்ததும், முதலில் விளங்குவது இருட்டு என்பதே இல்லை.
அது வெறும் தோற்றமே என்பதுதான்
ஒளியை விட புதிரானது இருட்டு. எங்கும் இருட்டு என்பதே இல்லை. அதை கண்டுபிடிக்க முடியாது.
அது வெறும் இன்மை(Absence).
அதற்கு என்று தனி இருப்பு ஏதும் இல்லை. ஒளி இன்மையைக் குறிப்பது இருட்டு.
ஒளியை உண்டாக்கலாம். அழிக்கலாம்.
ஆனால் இருட்டை படைக்கவும் முடியாது. அழிக்கவும் முடியாது.
இல்லாமலேயே எப்பொழுதும் இருப்பது இருட்டு.
அது இல்லாமல் இருப்பதால் அதை ஒன்றும் செய்ய முடியாது. தோற்கடிக்க முடியாது. இல்லாத ஒன்றை எவ்வாறுதோற்கடிப்பது?
இருட்டு எல்லாவற்றையும் தழுவி நிற்கிறது.
எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி நிற்கிறது.
ஒன்றுமில்லாத ஒன்று,,,,
ஓஷோ,,,
தந்த்ரா
Comments
Post a Comment