Google

நீங்கள் இங்கே இருக்கிறீர்களா? - OSHO




4.6 ஆன்மாவிற்கு ஒரு மருந்தகம்”.அத்தியாயம் - 4
பகுதி-6- நீங்கள் இங்கே இருக்கிறீர்களா?
.
ஒவ்வொருநாள் காலையிலும் ஜென்குரு ஒபாக்கு கேட்பார், `ஒபாக்கு, இன்னும் நீ இங்கே இருக்கிறாயா?’’
அவருடைய சீடர்கள் சொல்லுவார்கள், ``வெளிஆட்கள் கேட்டால், உங்களை பைத்தியம் என்று நினைப்பார்கள்! ஏன் இப்படி செய்கிறீர்கள்?’’
.
அவர் சொல்லுவார், ``காரணம் இரவில் நான் அப்படியே மறைந்துவிடுகிறேன்… கனவுகளும், சிந்தனைகளும் இல்லாத ஒரு மெளனமான மனது… நான் எழுந்திருக்கும்போது ஒபாக்கு இன்னும் இங்கே இருக்கிறான் என்பதை எனக்கு நானே நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. வேறுயாரிடம் நான் கேட்கமுடியும்? நான் என்னைத்தான் கேட்டுக்கொள்ள முடியும், ``ஒபாக்கு நீ இன்னும் இங்கு இருக்கிறாயா?’’
.
பிறகு தனக்குதானே சொல்வார், ``ஆமாம். ஐயா!’’
ஒருவருக்கு தன்மீதே ஒரு ஆழ்ந்தமரியாதை இருக்கவேண்டும். ராமன், கிருஷ்ணன் பெயரை மறுபடியும் மறுபடியும் சொல்வதைவிட, உங்கள் பெயரை சொல்லி, `நீ இங்கே இருக்கிறாயா?’ என்று நீங்கள் உங்களையே கேட்பது ஒரு மிகச்சிறந்த ஒழுக்கம் – மற்றவர்கள் கேட்பார்களே என்பதைப்பற்றி கவலைப்படவேண்டாம் – பிறகு சொல்லுங்கள், ``உள்ளேன் ,ஐயா!’’
.
நீங்கள் இதை செய்ய முடிந்தால், எத்தனை ஆழ்ந்த மெளனம் தொடர்கிறது என்பதை கண்டு வியந்து போவீர்கள்.  `நீ இன்னும் இங்கே இருக்கிறாயா?’ என்று நீங்களே கேட்டு, நீங்களே பதிலும் சொல்கிறீர்கள். “உள்ளேன், ஐயா’’ பிறகு அதைத்தொடர்ந்து ஒரு ஆழ்ந்த மெளனம். அது உங்களின் இருத்தலை நினைவு படுத்துவதும்கூட – கூடவே ஒரு மரியாதை. ஒருநாள் அதிகமாக உங்களுக்கு கொடுக்கப்பட்டிருப்பதற்கான ஒரு நன்றி, மறுபடியும் சூரியன் உதிக்கும், மறுபடியும் ஒருநாள் ரோஜாக்கள் மலர்வதை நீங்கள் பார்க்கக்கூடும்.
.
யாருக்கும் அந்த தகுதி இல்லை, ஆனாலும் வாழ்க்கை தன்னிடம் கொட்டிக்கிடப்பதை பொழிந்து கொண்டிருக்கிறது.
.
உங்கள் சத்தத்தை கண்டறியுங்கள்.
.
உங்கள் தொண்டையிலிருந்து மேல்புறமாக ஒரு சத்தம் எழுவதை உணரத்துவங்குங்கள். ஒருமுனகல், அல்லது ஒரு மெல்லியபாட்டு அல்லது ஒரு ரீங்காரம் என ஏதாவது சத்த அதிர்வுகள் எழுவதை உணருங்கள். நீங்கள் ஒரு மெல்லிய பாடலையோ, அல்லது சோக குரலையோ நீங்கள் உணரத்துவங்கினால், அதற்குள் செல்லுங்கள். அதற்காக வெட்கப்பட வேண்டியதில்லை. அதை உள்ளே வைத்திருக்காதீர்கள். அது உங்கள் உடலில் ஒரு அசைவை ஏற்படுத்தினால், நீங்களும் அசையுங்கள். அந்த சத்தம் உங்களை ஆட்கொள்ளட்டும்.
.
உங்கள் இருத்தலில் ஒரு பெரியசத்தம் அணைகட்டி நிற்கிறது. சிலசமயங்களில் அது பீறிட்டு வெளிவர காத்திருக்கிறது. அது வெளியே வராவிட்டால், நீங்கள் லேசாக உணர மாட்டீர்கள். நீங்கள் அதற்கு உதவ வேண்டும். அது பிறக்கக் காத்திருக்கிறது, அது உங்களை ஆட்கொள்ள வேண்டும்.; அதற்கு உதவ இது ஒன்றுதான் வழி.
.
நம்முடைய அடிப்படை இருத்தல் என்பது சத்தத்தினாலானது. ;அதுதான் நமது இருத்தலின் புராதன நுண்ணறிவு.
.
நீங்கள் கலந்து கொள்ளாவிட்டால், உங்களுடைய சத்தம் வேலை செய்யத்துவங்காது. நீங்கள் அதை பார்ப்பதனால் அது வேலை செய்யாது. அது சுறுசுறுப்பாகி, நகர்ந்து, உயிரோட்டமாக இருக்க வேண்டும். அதனால் மெல்லியகுரல் எழுப்புங்கள், பாடுங்கள். தினமும் காலையில், அதிகாலையில், சூரியோதயத்திற்கு முன்னால் ஐந்துமணிக்கு எழுந்து, ஒரு அரைமணி நேரம் பாடுங்கள், மெல்லிதாக, ரீங்காரம் செய்யுங்கள், லேசாக அலறுங்கள். அந்த சத்தங்களுக்கு எந்த அர்த்தமும் இருக்க வேண்டியதில்லை.  அந்த சத்தம் வெளிப்படையாக இருக்கவேண்டும், அதற்கு அர்த்தம் தேவையில்லை.  நீங்கள் அதை ரசிக்கவேண்டும், அவ்வளவுதான்; அதுதான் அர்த்தம். நீங்கள் அசைய வேண்டும். அது சூரியோதயத்தை புகழ்வதாககூட இருக்கட்டும், சூரியன் உதயம் ஆனதும் அதை நிறுத்துங்கள்.
.
அது நாள் முழுவதும் உங்களை ஒருவித லயத்தில் வைத்திருக்கும்.. நீங்கள் காலையிலிருந்து இசைவுடன் இருப்பீர்கள், அன்றையநாள் ஒரு வித்தியாசமான தரத்தில் இருப்பதை நீங்கள் காண்பீர்கள். நீங்கள் அதிக அன்போடு, அக்கறையோடு, அதிக பாசத்தோடு, அதிக நட்போடு, இருப்பீர்கள். வன்முறை, கோபம், ஆசை, தற்பெருமை ஆகியவை மிகவும் குறைவாகவே உங்களை ஆக்ரமிக்கும்.
.
நீங்கள் ஆட விரும்பினால், ஆடுங்கள்; நீங்கள் அசைய விரும்பினால் அசையுங்கள்.  அதன் முழுவிஷயமே நீங்கள் கட்டுப்படுத்தக் கூடாது; சத்தம் தான் உங்களை ஆட்சி செய்ய வேண்டும்.
.
-தொடரும்.
Osho_Tamil

Comments