Google

நீ செய்ய வேண்டியது எது - OSHO



நீ செய்ய வேண்டியது எது

ஒருவர் தன்மீது கவனம் செலுத்தி செய்ய வேண்டிய செயல் எதுவென்றால்

தன்னிச்சையான ரோபோட் பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும்.

நீ உனது பழக்கத்திலிருந்து விடுபட்டால் மிக விழிப்புணர்வு பெறுவாய்.

கவனத்தோடு அரைமணி நேரம் நடந்தால்

எவ்வளவு அமைதியாக எவ்வளவு சாந்தமாக

எவ்வளவு நிம்மதியாக நீ உணர்கிறாய் என்று பார்.

ஒரு மணி நேரம் அமர்ந்து சுவாசத்தை கவனித்தால்

உன் வாழ்க்கையில் நீ இதுவரை உணர்ந்திராத அளவு

மிகுந்த மௌனத்தையும், கவனத்தையும்

ஆனந்தத்தையும் அது உன்னுள் கொண்டு வரும்.

தன்னுணர்வுதான் வித்தியாசத்தை கொடுக்கிறது.

அந்த வித்தியாசம்தான் உன் வாழ்க்கை

முழுமையையும் மாற்றுகிறது.

பின் நீ சாப்பிடுவது, நடப்பது, சுவாசிப்பது

என எல்லாவற்றையும் மாற்ற முடியும்.

🌷--- ஓஷோ ---🌷
Osho_Tamil

Comments