Google

படித்து உணர்ந்ததை செயல்படுத்து



படித்து உணர்ந்ததை செயல்படுத்து
என்னுடைய பேச்சுக்களை வெறுமனே கேட்பது படிப்பது
மட்டும் அத்தோடு நின்று விட்டால் ,
மிகவும் முட்டாள்தனமானது.
நீங்கள் எதுவும் செய்யப்போவதில்லை என்றால்,
நேரத்தை வீணடிக்காதீர்கள் அது ஒரு வீணான செயல்.
செயல் முற்றிலும் தேவை.
ஏதாவது ஒரு உண்மையை நீ ஒத்துக்கொண்டால், உணர்ந்து கொண்டால் அதன்படி ஏதாவது செய்,
மற்றும் உடனடியாக செயல்படு!
மனம் மிகவும் தந்திரமானது,
மனதின் மிகச்சிறந்த தந்திரம் தள்ளிப்போடுதல்.
அது, “ஆமாம் நான் ஒருநாள் தியானம் செய்யப்போகிறேன்.
நாம் முதலில் தியானம் என்றால் என்ன
என்று புரிந்துகொள்வோம்” என கூறுகிறது.
மற்றும் பிறகு நீ தியானம் என்றால் என்ன
என்று வாழ்நாள் முழுவதும் புரிந்துகொண்டே இருக்கலாம்,
மற்றும் நீ ஒருபோதும் செயல்படபோவதில்லை.
மற்றும் நீ செயல்படும் வரை எதுவும் நடக்கப்போவதில்லை,
எந்த நிலைமாற்றமும் நிகழப்போவதில்லை.

--- ஓஷோ ---
OSHO

Comments