Google

புத்தர் கூறுகிறார் ! - OSHO




புத்தர்
கூறுகிறார் !

             " ஆயிரம் வெற்று வார்த்தைகளை விட    
               சாந்தி தரும் ஒரு வார்த்தை மேல் "

உங்களுடைய சாத்திரங்கள் முழுக்க
வெறும் வார்த்தைகள்தான் ..

உங்களுடைய மனதை நிறைத்து வைத்திருப்பவை வெறும் வார்த்தைகள்தான் ..

கடவுளைப் பற்றி தெரிந்து கொண்டு
கடவுள் என்ற வார்த்தையை சொல்லும் போது ..

பிரகாசமான ஔி நிறைந்து விடுகிறது ...

வார்த்தையை மட்டும் வைத்துக் கொண்டு
கடவுளை எனக்குத் தெரியும் ..

என்று நினைப்பதில் எந்த
அர்த்தமும் இல்லை ..

நீங்கள் வெற்று வார்த்தைகளில் இருந்து
விடுபடும் வரை ...

உங்கள் தேடுதல் நிறைவேறப்
போவதில்லை ..

எந்த வார்த்தையில் பிரகாசம்
தெரிகிறது ...

எந்த வார்த்தையில் உண்மையான
மணம் வீசுகிறது ..

எது சாந்தி தரும் வார்த்தை ...

என்பதை புரிந்து கொள்ளுங்கள் ..

அவை எப்போதும் வெளியே இருந்து
வருவதில்லை ...

நீ உனது உள்ளே போகும் போதுதான்
அதைக் கேட்க முடியும் ..

தியானத்தில்தான் நீ அதை கேட்க
முடியும் ..

ஆழ்ந்த மௌனத்தில்தான் நீ அதை
கேட்க முடியும் ..

ஏகாந்தத்தில்தான் நீ அதை கேட்க
முடியும் ..

உன்னுடைய அறிவின் ஆரவாரம்
அடங்கிப் போகும் போதுதான் ..

நீ அதை கேட்க முடியும் ...

பிறகு ஒரே வார்த்தைதான் இருக்கப்
போகிறது ...

அதுதான் ஓம் என்ற அட்சரம் ...

ஓஷோ ..
தம்ம பதம் 3
Osho_Tamil

Comments