மௌனத்திற்கும் பேரானந்தத்திற்கும் இடையே உள்ள உறவைப் பற்றி நீங்கள் பேசுவீர்களா?
கேள்வி: பிரிய ஓஷோ ! மௌனத்திற்கும் பேரானந்தத்திற்கும் இடையே உள்ள உறவைப் பற்றி நீங்கள் பேசுவீர்களா? மௌனம் மட்டுமே போதுமானதா? மற்ற அனைத்தும் அதைத் தொடர்ந்து வந்துவிடுமா? ஓஷோ... 🌸 பிரேம் சமர்பண் ! மௌனத்திற்கும், பேரானந்தத்திற்கும் எந்த உறவும் இல்லை. அவை ஒரே விஷயத்தின் இரண்டு பெயர்கள். 🌸 மௌனமே பேரானந்தம். இது அகராதிப் பொருளல்ல. இது உண்மை நடப்பு அனுபவம். அனுபவத்தில் இது, வேறு வேறு மனிதர்களுக்கு இது வேறு வேறாக இருப்பதில்லை. 🌸 நீ மௌனமாக மாறினால்... உன்னால் கவலைப்பட முடியாது. உன்னால் இறுக்கமாக முடியாது. உன்னால் துயரப்பட முடியாது. நீ சத்தம் போடவும் முடியாது. உன்னால் தொடர்ந்து படபடக்கவும் முடியாது. இல்லாவிட்டால், எப்படி நீ மௌனத்தில் இருக்க முடியும்? 🌸 இந்த அனைத்து முட்டாள்தனமான வேலைகளும் போய்விட்டால்... "பேரானந்த நிலையைக் கண்டுணரத் தேவையான இடத்தை... மௌனம் சுத்தம் செய்து வைக்கிறது." இவை கிட்டத்தட்ட ஒரே விஷயங்கள். ஏனெனில், அவை ஒரே சமயத்தில் நடக்கின்றன. 🌸 "நீ மௌனமானால்... ஒரு குறிப்பிட்ட இனிமை, ஒரு இனிய மணம், ஒரு இனிய எழில், இயல்பாகவே உனக்குள் தானாக எழும்." 🌸 ஆனால், உன...