Google

இரண்டு எண்ணங்கள் அல்லது வார்த்தைகளுக்கு இடையில் எப்போதும் ஒரு இடைவெளி உண்டு .. - OSHO




இரண்டு எண்ணங்கள் அல்லது வார்த்தைகளுக்கு
இடையில் எப்போதும் ஒரு இடைவெளி உண்டு ..

இடைவெளியில் மாத்திரம் கவனம் வையுங்கள் ..
எண்ணங்களை அலட்சியப் படுத்துங்கள் ..

உங்கள் கவனத்தை மாற்றி பாருங்கள் ..
இதற்கு ஒரு பரிசோதனையை செய்து பாருங்கள் ..

நெடுஞ்சாலையோரம் நிற்கும் போது கார்கள்
வரிசையாக செல்வதை பார்க்கின்றீர்கள் ..

ஒரு கார் சென்ற பிறகு அடுத்த கார் வருகிறது ..
பிறகு அடுத்த கார் .. இப்படி கார்கள் வரிசையாக செல்கின்றன ..

ஆனால் இரண்டு கார்களுக்கு இடையில் எப்போதும்
ஒரு இடைவெளி கண்டிப்பாக உண்டு ..

நீங்கள் கார்களின் மீது கவனம் வைப்பதை மாற்றி
இரண்டு கார்களுக்கு இடையே உள்ள வெளியின்
மீது கவனம் வையுங்கள் ..

ஒரு இடைவெளி அடுத்த இடைவெளி ..
இப்படி இடைவெளிகளின் மீது மட்டும்
கவனத்தை வைத்து வெறுமனே பாருங்கள் ..

இப்போது நீங்கள் அனேக இடைவெளிகளை
மட்டும் பார்ப்பதால் உருவங்களாகிய கார்கள் மறைந்து
ஒன்றுமே இல்லாத பின்புலம் மட்டுமே தெரியும் ..

கவனத்தை உருவத்தில் இருந்து மாற்றி
பின்புலத்தின் மீது வையுங்கள்..

எண்ணங்களே உருவங்கள் .. பிரக்ஞை தன்மைதான்
அதன் பின்புலம் ..

மனம் எண்ணங்களாகிய உருவங்களைக்
கொண்டது ..

எண்ணங்களற்ற மனமற்ற நிலை
அதன் பின்புலம் ..

ஆகவே பின்புலமாகிய அந்த இடைவெளிகளை பார்க்க முயலுங்கள் ..அதில் அதிக ஆழமாகச் செல்லுங்கள் ..

அவற்றில்தான் உண்மையான ரகசியங்கள்
அடங்கியுள்ளன ..

புரியாத புதிர்கள் அதில்தான்
மறைந்து உள்ளன ..

அந்த பிரக்ஞை தன்மையைக் கவனியுங்கள் ..
அது எல்லையில்லாதது ..

அதுதான் உங்கள் இருப்பு நிலை ( being) ..

ஓஷோ ..
சிறகுகள் இன்றி பற ..

Comments