Google

சாது ஒருவர் இமாலயத்துக்கு தவம் செய்யப் போனார்.




ஓஷோவின்
ஞான விளக்கம்,,,

சாது ஒருவர் இமாலயத்துக்கு தவம் செய்யப் போனார். மிக நீண்ட காலம் அங்கே தங்கி தவம் செய்தார்.

தனிமை,மௌனம். ஒரு கட்டத்தில் அவர் தான் போதுமான முதிர்ச்சியும் ஞானமும் அடைந்து விட்டதாக எண்ணினார்.

மனம் முழுவதும் அமைதி அவரை ஆட்கொண்டிருந்தது. சரி, இதுதான் திரும்பிச் செல்ல சரியான தருணம் என்று கீழே இறங்கி நகரத்துக்கு வந்தார்.

வரும் வழியில் ஒருவனைப் பார்த்தார். "கோயில் எங்கே இருக்கிறது?" என்று கேட்டார்.

என்னங்க?" என்றான் அவன். -வருடக்கணக்கில் பேசாததால் குரல் சரியாக வரவில்லை போலும் அந்த சாதுவுக்கு.

இன்னொருமுறை கேட்டார்.

இப்போதும் அவனுக்குக் கேட்கவில்லை. "சரியா சொல்லுங்க சாமி, என்ன கேட்கறீங்க? முதல்ல நீங்க யாரு? ஊருக்கு புதுசா?"

அவ்வளவு தான். கோபம் பொத்துக்கொண்டு
வந்து விட்டது அவருக்கு .

அற்பப் பதரே, என்னையா தெரியவில்லை? வருடக்கணக்கில் இமாலயத்தில் தவம் செய்து ஞானம் தேஜஸ் எல்லாம் பெற்று வந்திருக்கிறேன், என்னிடம் எப்படிப்பேசுவது என்று தெரியவில்லை?

கையில் வைத்திருந்த தடியை வைத்து அவனை அடிக்கத் தொடங்கி விட்டார்.

ஓஷோ,,,

அதாகப்பட்டது அறியப்படும்
நீதிஎன்னவென்றால்,,,

சாதுவுவின் வருடக்கணக்கிலான சாதகம் ஒரு நொடியில் விழுந்து விட்டது.

நீங்கள் எங்கே போனாலும் இமாலயத்துக்கு தப்பித்துப் போனாலும் அதே ஆள் தான். சூழ்நிலை தான் மாறுகிறது.

அதே துருப்பிடித்த பழைய ஆள் தான். கோபம், முட்டாள்தனம், பைத்தியக் காரத்தனம், ஈகோ எதுவும் மாறுவதில்லை.

உண்மையில் நீங்கள் ஞானம் பெறத்தகுதியான இடம் இமாலயம் அல்ல. அங்கேதான் உங்களைக் கோபப்படுத்த, உங்கள் தன்முனைப்பை சீண்ட  யாருமே இருக்க மாட்டார்களே!

அங்கே நீங்கள் எதையோ அடைந்து விட்டதாக ஒரு போலியான உணர்வு தான் மேலோங்கும்.

உண்மையான சோதனை உங்களுக்கு சந்தையில் தான் கிடைக்கும்.

ஜன சந்தடியில் இருக்கும் போதுதான் உங்கள் ஞானத்துக்கு  உரைகல் கிடைக்கும். அங்கே இருந்து கொண்டு புழங்கிக் கொண்டு சமநிலை பெற்று ஞானம் பெறுபவனே உண்மையான ஞானி.
.

Comments