Google

கணவன் -- மனைவி இல்லறம் ஆன்மீகம் ~ ஓஷோ ~




கணவன் -- மனைவி
இல்லறம் ஆன்மீகம் ~ ஓஷோ ~

ஒரு பெண் என்னைப் பார்க்க வந்தாள்

அவள் மிகவும் பணக்காரக் குடும்பத்தை,

மிகவும் நல்ல குடும்பத்தை, பண்பட்ட கல்வி, கலாச்சாரம் நிறைந்த குடும்பத்தைச் சேர்ந்தவள்

"நான் தியானிக்கத் தொடங்கினால்

அது, என் கணவருடனான என் உறவை எவ்வகையிலேனும் பாதிக்குமா..????"
என்று அவள் கேட்டாள்

அதற்கு நான் பதில் கூறும் முன்பாகவே, அவளே சொன்னாள்

"அது பாதிக்காது என்பது
எனக்குத் தெரியும்

ஏனென்றால்,

நான் அதிக நல்லவளாகவும், அதிகஅமைதியானவளாகவும்,
அதிக அன்பானவளாகவும்
ஆகிவிடும் போது

அது, என் உறவை
எவ்வாறு பாதிக்க முடியும்..???"

ஆனால் நான் அவளிடம் சொன்னேன்

"நீ சொல்வது தவறு

உன் உறவுமுறை பாதிக்கப்படவே போகிறது

நீ நல்லவளாக ஆனாலோ...

கெட்டவளாக ஆனாளோ...

அது முக்கியமில்லை

'நீ மாறுகிறாய்,

ஜோடியில் ஒருவர் மாறுகிறார்'

அப்போது அந்த உறவு
பாதிக்கப்படவே செய்யும்

மேலும் இதுதான் அதிசயம்

நீ மோசமானவளாக
ஆனால் கூட,

உறவுமுறை அதிகமாகப் பாதிக்கப்படாது

நீ அதிக நல்லவளாக ஆனால்

உறவுமுறை சீர்குலையவே போகிறது

ஏனெனில்,

ஜோடியில் ஒருவர் சீரழிந்து மோசமானவரானால்

மற்றவர் ஒப்பீட்டளவில்,

தன்னை உயர்ந்தவராக உணர்கிறார்

அது அவரது அகங்காரத்தைக் காயப்படுத்துவதில்லை

மாறாக

அகங்காரத்துக்கு அது
நிறைவளிப்பதாக இருக்கிறது

எனவே கணவன் குடிக்கத் தொடங்கினால்,

மனைவி நன்றாக உணர்கிறாள்

ஏனென்றால்

இப்போது அவள் நீதி போதகராக ஆகிறாள்

இப்போது அவள் அவனை அதிகமாக ஆதிக்கம் செய்கிறாள்

இப்போது அவன், வீட்டுக்குள் நுழையும் போதெல்லாம்

ஒரு குற்றவாளியைப் போலவே நுழைகிறான்

மேலும், அவன் குடிக்கிறான் என்ற காரணத்தினாலேயே

அவன் செய்யும் ஒவ்வொன்றும் தவறானதாகிறது

அதுவே போதுமானது

ஏனெனில்

அந்த வாதத்தை

எங்கிருந்தாலும் மனைவி திரும்ப திரும்ப இழுத்து வர முடிகிறது

எனவே எல்லாமே கண்டிக்கப்படுகிறது

ஆனால், ஒரு கணவன் அல்லது மனைவி

தியானத்தன்மை உள்ளவராக மாறினால்,

பின் இன்னும் ஆழமான
பிரச்சனைகள் இருக்கும்

ஏனென்றால்,

மற்றவரின் அகங்காரம் காயப்படும்

ஒருவர் உயர்ந்தவராக ஆகிறார்

அது நிகழ,

அனுமதிக்கக் கூடாது என்பதற்கு,

மற்றவர் எல்லாவகையிலும் முயல்வார்

சாத்தியமான எல்லாத்
தொல்லைகளையும் அவர் உருவாக்குவார்

"அப்படியே மற்றவருக்கு
தியானம் நிகழ்ந்தாலும்

அதை, அது நிகழ்ந்தது என்பதை

நம்பாதிருக்கவே அவர் முயற்சி செய்வார்

இதுவரை அது நிகழவில்லையே

என அவர் நிரூபிப்பார்

"நீயும் ஆண்டுக்கணக்கில்
தியானம் செய்து வருகிறாய்

எதுவுமே ஏற்பட்டதில்லை

அப்படியானால்

அதனால் என்ன பயன்...???

பயனில்லை

ஏனென்றால்,

இப்பொழுதும் உனக்கு கோபம் வருகிறது

இப்பவும் நீ இன்னின்னவற்றை செய்கிறாய்

இப்பவும் நீ பழைய ஆளாகவே
இருக்கிறாய்"

என்று அவர் சொல்லிக் கொண்டே போவார்

எதுவுமே நிகழவில்லை என்பதை

வலிந்து நிலைநிறுத்தவே அவர் முயல்வார்

"தன்னைத்தானே தேற்றிக்
கொள்வதுதான் இது"

கணவனோ, மனைவியோ...

உண்மையில் மாறியிருந்தால்....

மற்றவர் தானும் மாறியாக வேண்டும்

என்பதை ஒரு போதும் உணர்வதில்லை

"மாறவேண்டியது நானல்ல

நான் சரியானவன்,

முற்றிலும் சரியானவன்

இந்த உலகம்தான் தவறானது

ஏனெனில்,

அது எனக்குப் பொருத்தமேயில்லை என்கிறான்

"புத்தர்கள் அனைவரின் முயற்சிகள் அனைத்தும் மிகவும் எளிதானது

நீங்கள் எங்கிருந்தாலும்

நீங்கள் என்னவாக இருந்தாலும்

அதற்கு நீங்களே முழுக்காரணம் என்பதை

நீங்கள் உணரும்படி செய்வதே
அவர்களில் முயற்சியாக இருக்கிறது ♥

♦ஓஷோ
பதஞ்சலி யோகசூத்திரா ♦

Comments