Google

கடவுள் - ஓஷோ,,,



கடவுள்
ஓஷோ,,,

சிலவற்றை நிருபிக்க முடியாது
அதற்கு ஆதாரங்கள் கிடைக்காது
அதுவே அதற்கு ஆதாரமாக இருக்கும்.

அதை நிரூபிக்க முயல்வது
பைத்தியக்காரத்தனமாய் தோன்றும்.

அந்த முயற்சிகளில் ஈடுபடுகிறவர்
அதை அறியவில்லை என்றாகிவிடும்.

கடவுள் நிரூபண விவகாரம்
அப்படிப்பட்டது தான்.

முல்லா நசிருதீன் தேநீர் கடையில் அமர்ந்திருந்த போது, ஒரு பண்டிதர் கடவுளைப் பற்றி பெரிதாக பேசிக் கொண்டிருந்தார்.

கடவுள் இருக்கிறார் என்பதற்கு பல ஆதாரங்களை விளக்கிக் கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் அவரை ஒருவர் குறுக்கு கேள்வி கேட்டார்.

உடனே பண்டிதர் ஆவேசத்தோடு ஒரு புத்தகத்தை எடுத்து மேசை மேல் பலமாகப் போட்டார்.

இது தான் என் ஆதாரம்.நானே எழுதிய புத்தகம் இது என்றார் உரக்க.

எழுத்தறிவில்லாத அந்த மக்கள் " புத்தகமே எழுதிவிட்டாரே என்று அவரை பாராட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

முல்லா மெல்ல எழுந்தார்.

யாருக்காவது ஒரு வீடு விலைக்கு வேண்டுமா? என்று கேட்டார்.

உங்களுக்கு வீடு இருப்பதே எங்களுக்குத் தெரியாதே,, அதைப் பற்றி சொல்லுங்கள்,, என்றனர் அங்கு இருந்த மக்கள்.

செயல்கள், வார்த்தைகளை விட சத்தமாக ஒலிக்கும்,,, என்று உரக்ககத்தி விட்டு, தம் சட்டைப் பையிலிருந்து ஒரு செங்கல்லை எடுத்து மேசை மேல் போட்டார்.

இது தான் என் ஆதாரம். இதன் தரத்தைப் பாருங்கள். நானே கட்டிய வீடு" என்றார் முல்லா.

ஓஷோ,,,,

Comments